வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லடாக்: சீன ராணுவத்திடம் சிக்கிய இந்திய சிறுவனை மீட்க பாதுகாப்புப் படை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட அருணாச்சல பிரதேசத்தைச்
சேர்ந்த சிறுவனை ஒரு வாரத்தில் ஒப்படைப்பதாக சீனா தெரிவித்துஉள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி
நடக்கிறது. இங்கு, அப்பர் சியங் மாவட்டம், ஜிடோ கிராமத்தைச் சேர்ந்த மிரம்
தரன், 17, நண்பன் ஜானி யய்யிங் உடன் வேட்டைக்குச்
சென்றுஉள்ளான்.'ஹாட்லைன்'நம் அண்டை நாடான சீனாவின் டிசங்போ ஆறு, இந்திய
எல்லைக்குள் பாயும் இடத்தில் அவர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச்
சென்றனர். எனினும் ஜானி யய்யிங் சாமர்த்தியமாக தப்பித்து, மிரம் தரன்
கடத்தப்பட்டது குறித்து கிராமத்தினரிடம் தெரிவித்தான்.
இதையடுத்து அருணாச்சல
பிரதேச பா.ஜ., - எம்.பி., தபிர் காவோ, சிறுவன் கடத்தல் விவகாரம் குறித்து
மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரானிக்கிற்கு தெரிவித்தார்.அத்துடன்
பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும்
தெரியப்படுத்தினார்.இதையடுத்து இந்திய ராணுவம் எல்லையோர சீன
ராணுவத்தினருடன் 'ஹாட்லைன்' எனப்படும் உடனடி தொலை தொடர்பு வசதியை
ஏற்படுத்தியது.

அதுவரை சிறுவன் கடத்தல் தொடர்பாக வாய் திறக்காமல் இருந்த
சீனா, இந்திய ராணுவம் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தி விசாரித்ததும்,
மிரம் தரன் தங்கள் வசம் உள்ளதை ஒப்புக் கொண்டது.அத்துடன், ஒரு வாரத்தில்
சிறுவனை திரும்ப ஒப்படைப்பதாகவும் உறுதி அளித்துஉள்ளது. சீனா, நம் நாட்டின்
அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன ராணுவத்தினர்
அடிக்கடி அருணாச்சல பிரதேச எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொல்லை
கொடுப்பதாக ஜிடோ கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE