வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். 24,283 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 30,744 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 30,580 ஆக சற்று குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,57,732 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 30,567 பேர், மற்றும் ஆந்திர மாநிலம், கர்நாடகாவில் தலா 4 பேரும், குஜராத் 2, புதுச்சேரி , ஜார்கண்ட் மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 30,580 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,06,03,494 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 17,324 பேர் ஆண்கள், 13,256 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 18,28,727 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 13,05,225 ஆகவும் அதிகரித்து உள்ளது. 24,283 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,95,818 ஆக உயர்ந்துள்ளது.
40 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 15 பேரும் , அரசு மருத்துவமனையில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,218 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,452 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 23 ம் தேதி) 6,383 ஆக சற்று குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE