வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பான கோப்புகளை ஆட்சிக்கு வந்தால் வெளியிடுவேன் என்று சொன்ன பா.ஜ.க., அதனை இதுவரை செய்யாதது ஏன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேதாஜியின் 125வது பிறந்தநாள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் மரணம் தொடர்பாக இன்று வரை மர்மம் நீடிக்கிறது. 1945ல் தைவான் விமான விபத்தில் அவர் இறந்ததாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. மத்திய அரசு ஏப்ரல் 2016ல் பிரதமர் அலுவலகம், உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களிடமிருந்த நேதாஜி பற்றிய 25 கோப்புகளை வெளியிட்டுள்ளது. உளவுத்துறை வசமுள்ள கோப்புகள் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பிரதமர் மோடி சமீபத்திய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், நேதாஜி பற்றிய கோப்புகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றியிருப்பதாகவும், புதுடில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் நேதாஜி பிறந்த நாள் நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பேசியதாவது: நேதாஜியின் கடைசி நிமிடங்கள் பற்றி இன்று வரை நமக்கு தெரியாது. பா.ஜ.க., தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அதைப் பற்றிய தகவல்களை வெளியிடுவோம் என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மேற்கு வங்க அரசு கூட நேதாஜி பற்றிய அனைத்து கோப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் அவரது மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிடாதது ஏன்? நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே நேதாஜிக்கு சிலை வைக்கிறீர்கள். இவ்வாறு பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE