சமூக மாற்றத்துக்கு உதவும் ஆன்மிகம்:விருது வழங்கும் விழாவில் டாக்டர் சீதாராம் பெருமிதம்

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:சென்னையில் சாஸ்த்ரா சத்சங் நடத்திய விழாவில் மிருதங்க வித்வான் திருவாரூா் பக்தவத்சலம், ஆன்மிகச் சொற்பொழிவாளா் சுதா சேஷய்யன், நாதஸ்வர சகோதரா்கள் காசிம், பாபுவுக்கு 'சங்கீத வாச்சஸ்பதி' விருதுகளை டாக்டா். கே.ஈ. சீதாராம் வழங்கினார். திருச்சியை சேர்ந்த சீதாராம், தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசிக்கிறார். இவரது தந்தை ஈஸ்வர ஐயர், திருச்சி இ.ஆர்.எச்.எஸ்.,
சமூக மாற்றத்துக்கு உதவும் ஆன்மிகம்:விருது வழங்கும் விழாவில் டாக்டர் சீதாராம் பெருமிதம்

சென்னை:சென்னையில் சாஸ்த்ரா சத்சங் நடத்திய விழாவில் மிருதங்க வித்வான் திருவாரூா் பக்தவத்சலம், ஆன்மிகச் சொற்பொழிவாளா் சுதா சேஷய்யன், நாதஸ்வர சகோதரா்கள் காசிம், பாபுவுக்கு 'சங்கீத வாச்சஸ்பதி' விருதுகளை டாக்டா். கே.ஈ. சீதாராம் வழங்கினார்.

திருச்சியை சேர்ந்த சீதாராம், தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசிக்கிறார். இவரது தந்தை ஈஸ்வர ஐயர், திருச்சி இ.ஆர்.எச்.எஸ்., பள்ளியில் வேதியியல் ஆசிரியாக இருந்தார்.

விழாவில் சீதாராம் பேசியது:எனக்கும் இசை ஆர்வம் உண்டு. இவ்விழா என்னை 40 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது. இளம் பருவத்தில் திருச்சியில் வசித்தோம். 1960களில் திருச்சி தேசிய பள்ளி மைதானத்துக்கு காஞ்சி மஹா பெரியவர் வந்தார். அப்போது நள்ளிரவு வரை சங்கீத கச்சேரிகள் நடந்தன. சில நாட்கள் மைதானத்திலேயே துாங்கி விடுவேன்.

தற்போது மீண்டும் இந்தியா வந்து மார்கழி மாத இசை நிகழ்ச்சிகளை கேட்டது சிறப்பு அனுபவம். பாரதம் என்பது பாவம், ராகம், தாளம் என சாஸ்த்ரா பல்கலை துணை வேந்தர் வைத்தியசுப்ரமணியம் குறிப்பிட்டார். சாஸ்த்ரா பல்கலையின் அங்கமாக சாஸ்த்ரா சத்சங் திகழ்கிறது. இவை இரண்டும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். சமூகத்திற்கு கலாசார, ஒழுக்க ரீதியாக பங்களிக்கக்கூடிய இளைஞர்களை உருவாக்கும்.

ஆன்மிகம், கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம், சமூகத்தை சிறப்பாக மாற்றி அமைக்கலாம். சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களை பதிவிட வேண்டும். இந்திய வரலாற்றில் துறவிகள், அறிஞர்களின் வாழ்க்கை கதைகள் நிறைய உண்டு. இவர்களை ஆன்மிக விஞ்ஞானிகள் என குறிப்பிடலாம். சொந்த அனுபவம், ஆழமான அறிவு மூலம் அரிய விஷயங்களை கண்டுபிடித்தனர். இவர்களது கருத்துகள் மனித வாழ்வின் நோக்கத்தை அடைய வழிகாட்டிகளாக உள்ளன. இவ்வாறு சீதாராம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202205:04:16 IST Report Abuse
J.V. Iyer விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X