அமலாக்கத்துறையை அரசியல் நோக்கத்துக்காக ஏவிய பாஜ., : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
டில்லி: அமலாக்கத்துறையை அரசியல் நோக்கத்துக்காக பாஜ., ஏவியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.வரும் பிப்ரவரி 20ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அங்கு ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது.ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது மத்திய பாஜ., அரசு குறித்து குற்றச்சாட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டில்லி: அமலாக்கத்துறையை அரசியல் நோக்கத்துக்காக பாஜ., ஏவியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.



latest tamil news




வரும் பிப்ரவரி 20ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அங்கு ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது மத்திய பாஜ., அரசு குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆம் ஆத்மி கேபினட் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியது.


latest tamil news



சட்டமன்ற தேர்தலின்போது அமலாக்கத் துறை தனது கைப்பாவையாக பயன்படுத்திவரும் மத்திய பாஜ., அரசு திட்டமிட்டு தங்கள் கட்சி அமைச்சருக்கு களங்கம் விளைவிக்க சோதனை செய்ய ஏவி உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இதனைக் கண்டு தாங்கள் அஞ்சவில்லை என்றும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு வெற்றி பெறுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202205:58:45 IST Report Abuse
Mani . V 'சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்ய வரும் அமலாக்கத் துறையினரை வரவேற்பதாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்". ஹி....ஹி....
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
24-ஜன-202201:42:13 IST Report Abuse
Desi நீ கூட தான் உன் அரசியல் ஆசைக்காக அண்ணா ஹசாரேவை ஏவி விட்ட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X