கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கேப்டவுன்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்க அணி 3-0 என, தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என, ஏற்கனவே தொடரை இழந்தது. மூன்றாவது போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கேப்டவுன்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்க அணி 3-0 என, தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.



latest tamil news



தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என, ஏற்கனவே தொடரை இழந்தது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்திய அணியில் அஷ்வின், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், தீபக் சகார், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு ஜன்னேமன் மலான் (1), கேப்டன் பவுமா (8) ஏமாற்றினர். மார்க்ரம் (15) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் (124) சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த வான் டெர் துசென் (52) அரைசதம் அடித்தார். டேவிட் மில்லர் (39) ஓரளவு கைகொடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 49.5 ஓவரில் 287 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3, தீபக் சகார், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


latest tamil news



கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (61), விராத் கோஹ்லி (65) நம்பிக்கை தந்தனர். கேப்டன் ராகுல் (9), ரிஷாப் பன்ட் (0) உள்ளிட்டோர் ஏமாற்றினர். கடைசி நேரத்தில் தீபக் சகார் (54) கைகொடுத்தார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு விக்கெட் கைவசம் உள்ள நிலையில் 6 ரன் தேவைப்பட்டன. இதன் 2வது பந்தில் சகால் (2) அவுட்டானார். இந்திய அணி 49.2 ஓவரில் 283 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202208:00:55 IST Report Abuse
அசோகா மட்டமான கேப்டன்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அடி, இந்திய அணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரர்கள் இப்படி இருந்தா 2022 டி20 ஊஊஊஊஊ
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-ஜன-202202:01:19 IST Report Abuse
Girija மொத்த பயல்களும் தீபக் , ஷர்டுல தவிர அணிக்கு விளைபடவில்லை அவரவர் சொந்த நோக்குடன்தான் விளையாடினர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X