செய்திகள் சில வரிகளில்...

Added : ஜன 23, 2022 | |
Advertisement
வீடுகள், கோவிலுக்கு தீ வைப்புபோபால்: மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டம் கோட்வாலி பகுதியில் பூந்தி உபாத்யாயா என்ற தீபக், 28, குடிபோதையில் சவுகத் அலி என்பவரை தாக்கி உள்ளார். இதில் கைதான அவர் சமீபத்தில் ஜாமினில் வந்து, சவுகத் அலிக்கு சொந்தமானது உட்பட மூன்று வீடுகள், சிவன் கோவில் மற்றும் ஆட்டோவை தீ வைத்து எரித்தனர். மாயமான அவரை போலீசார் தேடுகின்றனர்.பேரிடர் மீட்பு படை

வீடுகள், கோவிலுக்கு தீ வைப்பு

போபால்: மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டம் கோட்வாலி பகுதியில் பூந்தி உபாத்யாயா என்ற தீபக், 28, குடிபோதையில் சவுகத் அலி என்பவரை தாக்கி உள்ளார். இதில் கைதான அவர் சமீபத்தில் ஜாமினில் வந்து, சவுகத் அலிக்கு சொந்தமானது உட்பட மூன்று வீடுகள், சிவன் கோவில் மற்றும் ஆட்டோவை தீ வைத்து எரித்தனர். மாயமான அவரை போலீசார் தேடுகின்றனர்

.பேரிடர் மீட்பு படை தளம் முடக்கம்

புதுடில்லி: என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான டுவிட்டரில் நேற்று முன்தினம் சில தவறான செய்திகள் பதிவாயின. மீட்பு படையினரின் தகவல் பதிவாகவில்லை. இதையடுத்து தளம் முடக்கப்பட்டதை அதிகாரிகள் அறிந்தனர். அதனை சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கின.

குற்றவாளிக்கு உதவி: 4 பேர் கைது

உத்தம்சிங் நகர்: பஞ்சாபின் பதான்கோட், லுாதியானாவில் கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சுக்ப்ரீத் தலைமறைவானார். இவருக்கு, உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் அடைக்கலம் கொடுத்ததாக ஷாம்ஷேர் சிங், அவரது சகோதரர் ஹர்பிரீத் சிங் உள்ளிட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை குழு அமைப்பு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையின் மத்திய பகுதியின் 20 மாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் பலியானதுடன், 23 பேர் காயம் அடைந்தனர். தீ விபத்து குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில் நால்வர் குழு விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

முடக்கப்பட்ட கவர்னர் சமூக வலைதளம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவின் 'டுவிட்டர்' தளம் நேற்று முடக்கப்பட்டது. கவர்னர் பெயரில் அரபு மொழியில் பதிவிட்ட தகவல் வாயிலாக இது உறுதியானது. இதைஅடுத்து, தளத்தை மீட்கும் பணிகளை அதிகாரிகள் துவங்கி உள்ளனர்

.40,000 கி.மீ., சைக்கிள் பயணம்

ஷில்லாங்: வட கிழக்கு மாநிலமான மேகாலயாவின் காசி ஹில்ஸ் மாவட்டம் மவுனாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பினியார்லாங் நோங்ப்ரி, 40. கல்லுாரி பேராசிரியரான இவர், இளைஞர்களை சைக்கிள் சவாரிக்கு ஊக்கப்படுத்த முடிவு செய்தார். இதற்காக கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு இடங்களுக்கு 40 ஆயிரம் கி.மீ., துாரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்

.ரயிலில் பெண்ணிடம் மிரட்டல்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டம்டம் ரயில்வே ஸ்டேஷனில், சமீபத்தில் ரயிலின் பெண்கள் பெட்டியில், 32 வயது மதிக்கத்தக்க நபர் ஏறி உள்ளார்.அதில் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளார். சம்பவங்களை இளம்பெண் 'மொபைல் போன்' உதவியுடன் 'வீடியோ' பதிவு செய்தார். அதன் உதவியுடன் அந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X