சினிபிட்ஸ் ....

Added : ஜன 23, 2022 | |
Advertisement
'ஜென்டில்மேன் - 2'வின் இசையமைப்பாளர் கீரவாணி!ஜென்டில்மேன் - 2 படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். படத்தின் நடிகர், நடிகையர், இயக்குனர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே, படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுபிடித்தால், தங்கக்காசு பரிசு தரும் போட்டி ஒன்றை தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.தற்போது, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி என்று தெரிவித்துள்ளார்.
 சினிபிட்ஸ் ....

'ஜென்டில்மேன் - 2'வின் இசையமைப்பாளர் கீரவாணி!ஜென்டில்மேன் - 2 படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். படத்தின் நடிகர், நடிகையர், இயக்குனர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே, படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுபிடித்தால், தங்கக்காசு பரிசு தரும் போட்டி ஒன்றை தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.தற்போது, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி என்று தெரிவித்துள்ளார். இவர், பாகுபலி மற்றும் விரைவில் வெளிவரவுள்ள ஆர்.ஆர்.ஆர்., படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லீ!புஷ்பா முதல் பாகம் வசூலை குவித்துள்ளதால், இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஓ.டி.டி., யில் வெளியான இப்படம் தற்போது தியேட்டரிலும் வெளியாகி உள்ளது.இதனிடையே, ஹிந்தியில் ஷாருக் கானை வைத்து படம் இயக்கும் அட்லீ, அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க உள்ளார். இப்படமும் 'பான் இந்தியா' படமாக உருவாக உள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.செல்வராகவனுக்குகொரோனா பாதிப்புஇயக்குனரும், சமீபத்திய நடிகருமான செல்வராகவன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ''எனக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த வர்கள், மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்,'' என்றார். அதேபோல, மலையாள நடிகர்கள் ஜெயராம், துல்கர் சல்மான் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.'பெல்' படத்தின்கதை என்ன? குருசோமசுந்தரம் வில்லனாக நடிக்கும் படம் பெல். ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வை திறனற்ற தனிநபரின் கதையே இப்படம். நிதிஷ் வீரா மற்றும் ஸ்ரீதர் கதை நாயகர்களாக நடித்துள்ளனர். வெங்கட்புவன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பெல் படத்தில் இதுவரை பார்க்காத வில்லனை பார்க்கலாம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.மேலாளரிடம் வேண்டாம் என்னுடனேயே பேசலாம்நடிகர் யோகிபாபு, தன் மேலாளர் சசியை அவரது குடும்ப சூழல் காரணமாக பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். 'படம் தொடர்பான விஷயங்களை என்னுடனேயே நேரடியாக பேசலாம். சசியுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்' என்றும் யோகிபாபு கூறியுள்ளார்.விஜய் ஆன்டனிக்கு மூன்று நாயகியர்இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் ரத்தம் படத்தில், விஜய் ஆன்டனி நாயகனாக நடிக்கிறார்.இதில், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று நாயகியர். இப்படம் அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.போட்டோ ஷூட்டில் கலக்கிய தீபிகா படுகோனே!சமூக வலைதள பக்கத்தில், ஆறு கோடிக்கு மேலான ரசிகர்களை கொண்ட நடிகை தீபிகா படுகோனே, சமீபத்தில் வெளியிட்ட போட்டோ ஷூட் படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. 83 படத்தை அடுத்து, தீபிகா படுகோனே நடித்துள்ள, ஜிக்ரையான் படம் ஓ.டி.டி.,யில் நாளை வெளியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X