வீடு, கடைகள் தோறும் 'ஸ்டிக்கர்': டெங்கு பரவல் தடுக்க தீவிரம்

Added : ஜன 23, 2022 | |
Advertisement
அவிநாசி;அவிநாசி பேரூராட்சி பகுதியில், டெங்கு பரவலை கண்காணித்து, கட்டுப்படுத்த வீடு, கடைகள் தோறும் 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அவிநாசியில், ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் தென்படுகிறது. நல்ல தண்ணீரில் தான், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு முட்டையிட்டு, உற்பத்தியை பெருக்கும் என்ற சூழலில், 'திறந்தவெளியில் தண்ணீரை
 வீடு, கடைகள் தோறும் 'ஸ்டிக்கர்': டெங்கு பரவல் தடுக்க தீவிரம்

அவிநாசி;அவிநாசி பேரூராட்சி பகுதியில், டெங்கு பரவலை கண்காணித்து, கட்டுப்படுத்த வீடு, கடைகள் தோறும் 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அவிநாசியில், ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் தென்படுகிறது. நல்ல தண்ணீரில் தான், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு முட்டையிட்டு, உற்பத்தியை பெருக்கும் என்ற சூழலில், 'திறந்தவெளியில் தண்ணீரை வைக்காமல் மூடி வைக்க வேண்டும்' என, பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.இப்பணியை கண்காணிக்க, வீடு மற்றும் கடைகள் தோறும், 'ஸ்டிக்கர்' ஒட்டி வைத்துள்ளனர். தினந்தோறும், வீடு, கடைகள் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வில் ஈடுபடும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், கொசு உள்ளதா என்பதை கண்காணிப்பர்; மாதந்தோறும், அந்த ஸ்டிக்கரில், அதை பதிவு செய்வர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:கடந்த 2018-- 19ல், இதுபோன்று, 'ஸ்டிக்கர்' ஒட்டும் நடைமுறையை பின்பற்றினோம்; தற்போது மீண்டும் துவக்கியுள்ளோம். பேரூராட்சியில், 11 ஆயிரம் கதவு எண்கள் உள்ளன. கள ஆய்வில், தொடர்ந்து இரு வாரம் டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டால், அடுத்து எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கப்படும். அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்து டெங்கு கொசுப்புழுக்கள் தெனப்பட்டால் அந்த வீடு, கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த ஸ்டிக்கரில் கண்காணிப்பு பணி 'அப்டேட்' செய்யப்படுவதன் மூலம் உயரதிகாரிகள் 'விசிட்' செய்யும் போது, அவர்கள் கள நிலவரத்தை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X