பொங்கலுார்:'முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா' கோஷத்துடன் அலகு மலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.பொங்கலுார் அடுத்த அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த 20ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து புண்ணியாகவாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது. 21ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அங்குரார்ப்பணம், ரக்சாபந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடந்தன.நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாகபூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை கலசங்கள் புறப்பாடு, காலை,9:30 மணிக்கு முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர் கள் 'முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா' என்று கோஷமிட்டு கோபுர தரிசனம் செய்தனர்.அர்ச்சகர்கள், விழாக்குழுவினர் உட்பட சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் மலையைச் சுற்றிலும் ஆங்காங்கே தோட்டம், வீடுகள், ரோடுகளில் நின்றவாறு கோபுர தரிசனம் செய்தனர்.மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் குமார், திருப்பணிக்குழு தலைவர் சின்னு, ஊராட்சி தலை வர் துாயமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நேற்று மாலை வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம், புதிய தேர்பவனி, தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE