முருகன் மீது அன்பு, பாசம் உண்டு: முதல்வர் ஸ்டாலின் ருசிகர பேச்சு| Dinamalar

முருகன் மீது அன்பு, பாசம் உண்டு: முதல்வர் ஸ்டாலின் ருசிகர பேச்சு

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (7) | |
சென்னை-''முருகன் மீது நமக்கு அன்பு, பாசம் உண்டு,'' என, சென்னை அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., தலைமை நிலைய செயலரும், வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகனின் மகள் அருணா - அசோக் சக்கரவர்த்தியின் திருமணம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. 'நானே அறிவாளி'மணவிழாவிற்கு தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பூச்சி
 முருகன் மீது அன்பு, பாசம் உண்டு: முதல்வர் ஸ்டாலின் ருசிகர பேச்சு

சென்னை-''முருகன் மீது நமக்கு அன்பு, பாசம் உண்டு,'' என, சென்னை அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., தலைமை நிலைய செயலரும், வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகனின் மகள் அருணா - அசோக் சக்கரவர்த்தியின் திருமணம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. 'நானே அறிவாளி'மணவிழாவிற்கு தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பூச்சி முருகனின் தந்தை சிவசூரியன் திருமணம், அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கருணாநிதியுடன் நெருக்கமாக சிவசூரியன் இருந்தார்.

சினிமாவில் மட்டுமின்றி, கட்சியின் பிரசார நாடகத்திலும் அவர் நடித்திருக்கிறார்.அவருடன் எனக்கு ஒரு சம்பந்தம் உண்டு. 'நானே அறிவாளி' என்ற ஒரு நாடகம்.அந்த நாடகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன் கருணாநிதி நடித்து இருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கருணாநிதிக்கு பதிலாக, பல நடிகர்களை அதில் இணைத்து, நடிக்க வைத்தார்.ஒரு முறை நாரதர் வேடமேற்றிருந்த சி.வி.ராஜகோபாலுக்கு உடல்நலம் பாதித்து, நாடகத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக நாரதர் வேடத்தை நானே ஏற்று நடித்தேன்.எனவே, பூச்சி முருகனை எனக்கு தெரியும் முன், அவருடைய தந்தை நடித்த அந்த நாடகத்தில், நானும் இணைந்து நடித்தேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 'இந்தியாவில் நம்பர் 1 முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்' என, பெருமையோடு சொன்னார்.என்னை பொறுத்தவரை நம்பர்- 1 முதல்வர் என்பதை விட, நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். அதற்காகவே நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பூச்சி முருகனின் மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வு பெற இருக்கிறார். அவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வரும் போது, தி.மு.க., ஆட்சியிலேயே அவர் ஒரு பொறுப்பேற்று பணியாற்றும் வாய்ப்பும், அவருக்கு வரவிருக்கிறது. அடைமொழிமுருகனின் பெயருக்கு முன், 'பூச்சி' என்ற ஒரு அடைமொழி ஒட்டிக் கொண்டிருக்கிறது.

'பூச்சி' என்றால் பூச்சி மாதிரி இருப்பார் என, நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், விஷப் பூச்சிகளை, கொடுமையான பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்கிற கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.அவருடைய பெயரை பூச்சி முருகன் என்றும், சிலர் பூச்சி என்றும் கூப்பிடுகின்றனர். நான் பெரும்பாலும் பூச்சி என்று கூப்பிடுவது இல்லை. முருகன்... முருகன்... என்று தான் கூப்பிடுவேன். ஏனென்றால், முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. மணமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X