தம்பிக்கு தொற்று: அண்ணன் தற்கொலை| Dinamalar

தம்பிக்கு தொற்று: அண்ணன் தற்கொலை

Added : ஜன 23, 2022 | |
புதுச்சேரி-புதுச்சேரி, முருங்கப்பாக்கம் கிரீன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர ராஜீவ்,76; ஏ.எப்.டி., மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்த இவருக்கு, தம்பி செல்வம் பணிவிடை செய்து வந்தார். செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்பி இறந்து விட்டால், தன்னை யார் கவனிப்பது என்ற கவலையில்,

புதுச்சேரி-புதுச்சேரி, முருங்கப்பாக்கம் கிரீன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர ராஜீவ்,76; ஏ.எப்.டி., மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்த இவருக்கு, தம்பி செல்வம் பணிவிடை செய்து வந்தார். செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்பி இறந்து விட்டால், தன்னை யார் கவனிப்பது என்ற கவலையில், நேற்று முன்தினம் மாலை வீராம்பட்டினம் கடலில் குதித்து சந்திர ராஜீவ் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X