கல்வி அலுவலகம் சூறை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

Added : ஜன 23, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை--மணமேல்குடி அரசு துவக்கப் பள்ளி ஆசிரியை, வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, மணமேல்குடி பகுதியைச் சேர்ந்தவர் தைலம்மை, 51; மணமேல்குடி அரசு துவக்கப் பள்ளி ஆசிரியை.பள்ளிக்கு முறையாக வருவதில்லை. அதிகாரிகளுக்கு முறையாக விளக்கம் அளிப்பதில்லை போன்ற காரணங்களால், மூன்று

புதுக்கோட்டை--மணமேல்குடி அரசு துவக்கப் பள்ளி ஆசிரியை, வட்டார கல்வி அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, மணமேல்குடி பகுதியைச் சேர்ந்தவர் தைலம்மை, 51; மணமேல்குடி அரசு துவக்கப் பள்ளி ஆசிரியை.பள்ளிக்கு முறையாக வருவதில்லை. அதிகாரிகளுக்கு முறையாக விளக்கம் அளிப்பதில்லை போன்ற காரணங்களால், மூன்று மாதங்களாக அவருக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரம்அடைந்த தைலம்மை, சில நாட்களுக்கு முன், மணமேல்குடியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்துள்ளார். அங்கிருந்த ஆவணங்களை துாக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டு, அங்கு இருந்தவர்களை வேலை செய்யக்கூடாது எனவும் மிரட்டினார்.

இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது.தைலம்மை மீது, வட்டார கல்வி அலுவலகம் சார்பில், மணமேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, அவரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X