மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த பனையூரைச் சேர்ந்தவர் முத்துராமன், 45; விவசாயி. இவர், 30 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை அவரது விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து, காவலுக்கு படுத்திருந்தார்.நேற்று அதிகாலை 4:00 மணியளவில் வீட்டிற்கு சென்றவர், 8:00 மணிக்கு திரும்பினார். அப்போது, மர்ம விலங்கு கடித்து, 15 ஆடுகள் பலியாகி கிடந்தன. வேட்டவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓடும் காரில் திடீர் தீ விபத்து
ஆம்பூர்: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர், நண்பர்கள் இருவர் என மூன்று பேரும், 'ரெனால்ட் டஸ்டர்' காரில், புதுச்சேரி வந்து நேற்று பெங்களூரு கிளம்பினர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அண்ணாநகர் அருகே சென்றபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. உடன் மூவரும் கீழே இறங்கி உயிர் தப்பினர். அரிசி கடத்திய முதியவர் கைதுசேலம்: சேலம், சாமிநாதபுரம் ஓடை அருகில் இருந்து, சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், ஆட்டோவை சோதனை செய்ததில், 3,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. கடத்த முயன்ற, ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 60, என்பவரை கைது செய்தனர்.
திருச்சி அருகே 24 குரங்குகள் பலி
திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே, பாடாலுார் வனப்பகுதியை ஒட்டிச் செல்லும் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், நேற்று 18 ஆண், ஆறு பெண் குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்தன. வனத் துறையினர், குரங்குகளின் உடல்களை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர். குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விஷம் வைத்துக் கொன்றனரா என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE