எக்ஸ்குளுசிவ் செய்தி

கைரேகை பதிவில் தொடரும் சிக்கல் : ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பல்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (3)
Advertisement
கோவை:ரேஷன் கடைகளில் தற்போதுள்ள '2ஜி நெட் ஒர்க்'கை மாற்றாமல் ஆன்லைன் வினியோகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கென, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், இணையம் வாயிலாக இயங்கும் மின் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப
 கைரேகை பதிவில் தொடரும் சிக்கல் : ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பல்

கோவை:ரேஷன் கடைகளில் தற்போதுள்ள '2ஜி நெட் ஒர்க்'கை மாற்றாமல் ஆன்லைன் வினியோகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கென, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், இணையம் வாயிலாக இயங்கும் மின் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர் கைரேகை பதித்த பிறகு பொருட்கள் வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வரில் அடிக்கடி ஏற்படும் பிரச்னையால் இணைய வேகம் குறைந்து இம்மின் சாதனம் சரி வர இயங்குவதில்லை. இந்த சாதனம், '2ஜி நெட் ஒர்க்'கில் இயங்குவதால் வேகமாக இருக்காது, வாரத்தில் நான்கு நாட்கள் கோளாறு ஏற்பட்டு, பொருட்கள் வழங்குவதில் தடங்கள் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புலம்புகின்றனர்.
பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்புவதுடன், கோபத்தில் ரேஷன் கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். பல குடும்ப அட்டைதார்களின் கைரேகை இயந்திரத்தில் பதிவாவதில்லை.ரேஷன் கடைகளை பொறுத்தவரை இது தீராத பிரச்னையாக இருந்து வருகிறது.இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது, கைரேகை பதிவு வேண்டாம் என, நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்த பின்னரே பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்ற பழைய நடைமுறையை அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
ரேஷன் கடை உழியர்கள் கூறுகையில், 'இந்த 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு தீர்வு காணாமல், ஆன்லைன் பதிவு மூலம் பொருட்கள் வழங்குவது சரியாக வராது. கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் கொடுக்க கூடாது என, அதிகாரிகள் கூறுகின்றனர்; ஆனால், பலருக்கு கைரேகை பதிவாவதில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டால் கண்டு கொள்வதில்லை. ரேஷன் கடைகளை பொறுத்தவரை தற்போது உள்ள '2ஜி நெட் ஒர்க்'கை மாற்றாமல் ஆன்லைன் வினியோகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது' என்கின்றனர்.


பொருட்கள் வாங்கலாம்!

கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரியிடம் கேட்டபோது, ''நெட் ஒர்க்' பிரச்னை அனைத்து கடைகளிலும் இருப்பதில்லை. சில நாட்களில் தடங்கள் இருக்கும். இதற்கென, எல்லா தாலுகாவிலும் இன்ஜினியர்கள் உள்ளனர்; அரை மணி நேரத்தில் சரி செய்து விடுவார்கள். ஆதார் 'அப்டேட்' செய்யதாவர்களுக்கு ரேகை பதிவாகாது.
இவர்கள், ஆதார் பதிவை உறுதி செய்ய வேண்டும். கைரேகையில் பிரச்னை இருப்பவர்கள் தாலுகா வழங்கல் அதிகாரியிடம் அனுமதி பெற்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
24-ஜன-202212:20:11 IST Report Abuse
நக்கீரன் பல இடங்களில் கைரேகை பிரச்சனையை வைத்து ரேஷன் ஊழியர்கள் மக்களுக்கு பொருட்களை வழங்குவதில்லை. ஆனால், வழங்கியதாக குறுந்செய்தி மட்டும் வந்துவிடுகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் கள்ள சந்தையில் விற்கப்படுகின்றன. படிப்பறிவில்லாத அப்பாவி ஏழை மக்கள் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். அரசியல்வாதிகளும் ரேஷன் ஊழியர்களும் கூட்டணி அமைத்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கின்றனர். இன்னும் சில இடங்களில் ஒரு படி மேல சென்று ரேஷன் ஊழியர்களே கைரேகை இயந்திரத்தை வேண்டுமென்றே பழுதாகி விடுகின்றனர். இந்த திட்டத்தை தோல்வி அடைய செய்ய வேண்டுமென்பதே அவர்களின் நோக்கம். இதற்க்கு பேசாமல் மக்களின் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி அவர்களே பொருட்களை வாங்கிக்கொள்ள செய்து விடலாம். ரேஷன் பித்தலாட்டத்தை தவிர்க்கலாம்.
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202212:00:56 IST Report Abuse
Murugesan உண்மை அரவக்குறிச்சியில் வேலை செய்ய வில்லை வயதான எனது தாயாரை நெடுநேரம் காக்க வைத்து திருப்பி அனுப்பிவிட்டனர்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜன-202211:12:27 IST Report Abuse
duruvasar 20 கிலோ அரிசி குருணை வாங்க எதுக்குங்க இத்தனை அக்கப்போர். குருணை மில் கஞ்சிதான் வைக்கனும். பேசாமா அவங்களே கஞ்சி காய்ச்சி தினம் கொடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X