முடநீக்கவியல் மருத்துவர் கோகுல் ராஜ்: நம் நாட்டில், 'வீட்டிலிருந்த படியே வேலை திட்டம்' அமலுக்கு வந்து விட்டாலும், பெரும்பாலானோரின் வீட்டில், நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை செய்யத் தேவையான இருக்கை கட்டமைப்பு வசதிகள் இல்லை.நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் பணியாற்றுவதால், முதுகு, தோள், இடுப்பு, மூட்டு வலிகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. எதிர்பார்க்கும் பணி சூழலும், போதிய உடற்பயிற்சியும் இல்லாதது, உடல் ஆரோக்கியத்தை இன்னும் மோசமாக்குகின்றன.
இருப்பினும், வீட்டிலிருந்து பணியாற்றும் முறை, புதிய இயல்பாகி போனதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், பிரச்னைகளை சமாளிப்பதும் கட்டாயமாகிறது.
உங்கள் மூட்டுப் பிரச்னைகள் குறித்த அடிப்படை காரணிகளை புரிந்து கொள்ள, மருத்துவ நிபுணரிடம் முதற்கட்ட ஆலோசனை பெறுங்கள். இப்பிரச்னைகள் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் வகையில் நிலைமை தீவிரமாக மாறுவதற்கு முன், மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்லுங்கள்.சிலருக்கு மறைமுக முடநீக்கியல் பிரச்னை ஏற்படலாம். இந்தியர்களில், 64 சதவீதத்தினர் முறையான உடற்பயிற்சி செய்வதில்லை.
எனவே, அவர்களை பொறுத்தவரை அலுவலகம் சென்று வருவதும், ஒரு வகையான உடற்பயிற்சி தான். வெளியே பயணிப்பதால் போதிய சூரிய வெளிச்சம் உடலில் பட்டு, தேவையான, 'விட்டமின் - டி' சத்தை தருகிறது. விட்டமின் - டி சத்து குறைபாடு, முடநீக்கியல் ரீதியாக ஆரோக்கிய குறைவாகக் கருதப்படுகிறது!
வீட்டிலேயே இருப்பதால் எலும்புகள் மற்றும் மூட்டுகள் பாதிப்புடன், சிலர் நடையிலும் மாறுபாடு ஏற்படும்.மனிதர்கள் மற்றும் சமூகத்துடனான தொடர்பு குறைவதால், மனநலப் பிரச்னைகளும் எழக்கூடும்.எனவே, கொரோனா கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலும், உரிய சிகிச்சையை எடுத்தே தீர வேண்டும்.மூட்டு மற்றும் தோள் வலி திடீரென அவசர சிகிச்சையாக மாறக்கூடும் என்பதால், கீழ்காணும் நோய்க்குறிகள் குறித்த எச்சரிக்கை அவசியம்...
* அசைவுகளின் போது தீவிர முதுகு வலி
* அசைவுகளின் போது அசவுகரியத்தை ஏற்படுத்தும் சிறு வெடிப்பொலிகள்
* தோள் இறுக்கம்
* வலியால் துாக்கம் தடைபடுதல்
* மாடிப்படி ஏறும் போதும், ஏறிய பின்னரும் மூட்டுகளில் வீக்கம், வலி, சிறு வெடிப்பொலி.மேற்கண்ட நோய் அறிகுறிகள் இருப்பின், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்!

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement