ஞாயிறு ஊரடங்கு எதிரொலி: 400 ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | |
Advertisement
சென்னை: ஞாயிறு ஊரடங்கால், 400 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:பொங்கல் பண்டிகையின் போது, 1,200 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. பின் பயணியர் வருகை எதிர்பார்த்த அளவு இல்லை. ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், சனி இரவே பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி மறுத்து விட்டது. திங்கள் காலை 7:00

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஞாயிறு ஊரடங்கால், 400 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:பொங்கல் பண்டிகையின் போது, 1,200 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. பின் பயணியர் வருகை எதிர்பார்த்த அளவு இல்லை. ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், சனி இரவே பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி மறுத்து விட்டது.



latest tamil news



திங்கள் காலை 7:00 மணிக்கு பின் இயக்க அறிவுறுத்தினர்.இதனால், பொங்கல் பண்டிகை முடிந்த ஒரே வாரத்தில் 400 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. தினமும் எகிறும் டீசல் விலை, போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி, பயணியர் வருகை சரிவால், தற்போது இயக்கத்தில் உள்ள ஆம்னி பஸ்களின் எண்ணிக்கையிலும் சரிவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்


latest tamil news



.வருவாய் சரிவுஅரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 1,150 பஸ்கள், தமிழகம், அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. தினமும், 1.30 முதல் 1.45 கோடி ரூபாய்; வார விடுமுறை நாளில், 1.80 முதல் 2.20 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. ஞாயிறு ஊரடங்கால், இந்த வருவாய் 60 சதவீதம் சரிந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X