''வாங்குற இடத்துல கூட கெடுபிடி இல்லைன்னு கலாய்க்கிறாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''யாரை, யாருவே கலாய்ச்சது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சேலம் மாவட்டத்துல எங்கயும் கள்ளத்தனமா மது விற்கக் கூடாதுன்னு எஸ்.பி., அபிநவ் உத்தரவு போட்டிருக்கார்... ஆனா, சங்ககிரி போலீசார் இதை கண்டுக்கவே இல்லை பா...
''இங்க நிறைய சந்துக் கடைகள்ல பிஸ்கட் பெட்டிகளை விற்குற மாதிரி, மது பாட்டில்களை மொத்தமா வாங்கி, பெட்டி, பெட்டியா வித்துட்டு இருக்காங்க... பக்கத்துல இருக்கிற நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில விற்கிறதுக்காக, சங்ககிரி சன்னியாசிப்பட்டி வந்து பலரும் பெட்டி பெட்டியா மது வாங்கிட்டு போறாங்க பா...
''அந்த மாவட்ட போலீசார் பிடிச்சா, 'சார், சங்ககிரியில விற்கிற இடத்துலயே பிடிக்கலை... நீங்க மட்டும் பிடிக்குறீங்களே'ன்னு கிண்டல் பண்றாங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.
''சந்தடி சாக்குல 100 ரூபாயை மறந்துட்டாங்கல்லா...'' என்றார் அண்ணாச்சி.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்போம்னு வாக்குறுதி குடுத்தாங்கல்லா... மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமத் தொகை தருவோம்னு சொன்னதையும் இன்னும் அமல்படுத்தல வே...
''எல்லாரும் அதைப் பத்தியே பேசிட்டு இருக்கிறதால, சிலிண்டர் மானியத்தை சுத்தமா மறந்துட்டாவ...இதனால குடும்ப தலைவிகள் பலரும், அரசு மீது கடுப்புல இருக்காவ...
''இது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல எதிரொலிக்குமோன்னு ஆளுங்கட்சி நிர்வாகிகள் கவலைப்படுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''போன பத்தே நாள்ல திரும்பி வந்துட்டாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை நகர ஊரமைப்பு துறை இணை இயக்குனர் அலுவலகத்துல இருந்த பெண் உதவியாளர் ஒருத்தரை, சமீபத்துல நீலகிரி மாவட்டத்துக்கு மாத்தினாங்க... அவங்க, ஊட்டிக்கு போய் டூட்டியில சேர்ந்த ஒரு மணி நேரத்துல, 'மெடிக்கல் லீவ்'ல போயிட்டாங்க...
''எண்ணி பத்தே நாள்ல, கோவைக்கே 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு வந்துட்டாங்க... இந்த ஆபீஸ்ல அந்தம்மாவும், கண்ணும் கருத்துமான பொறுப்புல இருக்கிற அதிகாரியும் வச்சது தான் சட்டமா இருக்குதுங்க...
''ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் 'ரேட்' பேசி, தலைமை அலுவலகம் வரைக்கும் பங்கு பிரிச்சுக் குடுக்கிறதே இவங்கதானாம்... அதனால தான், அவங்களுக்கு மறுபடியும் பழைய இடத்துக்கே டிரான்ஸ்பர் கிடைச்சதுன்னு சொல்றாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''அறிவழகன், உங்க நட்சத்திரத்துக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் இருக்கு... புது வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்க வேண்டாம் ஓய்...'' என பேச, மற்றவர்கள் கிளம்பினர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement