பந்தலுார்--நீலகிரி மாவட்டம், அய்யன்கொல்லியில், யுனி மற்றும் லுனி சைக்கிள்கள் ஓட்டி, அண்ணன், தங்கை அசத்துகின்றனர்.
மலை மாவட்டமான, நீலகிரியில் சாதாரண சைக்கிள் ஓட்டுவதே சிரமம். ஆனால், பந்தலுார் அருகே அய்யங்கொல்லி பகுதியைச் சேர்ந்த பேபி, லிண்டா தம்பதியின் குழந்தைகள், பரத்ரோசன், 12; வைகா, 9 ஆகியோர், ஒற்றை சக்கரமான யுனி மற்றும் லுனி சைக்கிள் ஓட்டி அசத்துகின்றனர்.கடந்த கொரோனா காலத்தில், மொபைல் போனில் குழந்தைகள் மூழ்குவதை தடுக்க, தந்தை பேபி இணையத்தில் தேடி, மேலை நாடுகளின் பிரபலமான யுனி சைக்கிள் பயிற்சி அளிக்க முடிவு செய்தார்.
நம் நாட்டில் இந்த சைக்கிள்கள் இல்லாத நிலையில், இவரே இரு சைக்கிள்களை வடிவமைத்து, பயிற்சி அளித்தார். ஒரே வாரத்தில் பயிற்சி நிறைவு செய்த இருவரும், அய்யங்கொல்லி - எருமாடு வரையிலான, 8 கி.மீ., துாரத்தை எளிதாக ஓட்டி சென்று, தங்களது திறமையை வெளிக்காட்டியது அனைவரின் பாராட்டையும் பெற்றது.பேபி கூறுகையில், ''இருக்கை, ஒரு டயர், பெடல் கொண்டது யுனி சைக்கிள். ஒரு டயருடன் இருக்கை இல்லாதது லுனி சைக்கிள். இவற்றை கால்களின் பேலன்ஸ் மற்றும் பேரிங் பேலன்ஸ் பயன்படுத்தி மட்டுமே ஓட்ட முடியும். ''இதுபோன்று குழந்தைகளின் தனித் திறமைகளை கொண்டு வர, பெற்றோர் முன்வருவது அவசியம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE