இந்திய நிகழ்வுகள்
வீடுகள், கோவிலுக்கு தீ வைப்பு
போபால்: மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டம் கோட்வாலி பகுதியில் பூந்தி உபாத்யாயா என்ற தீபக், 28, குடிபோதையில் சவுகத் அலி என்பவரை தாக்கி உள்ளார். இதில் கைதான அவர் சமீபத்தில் ஜாமினில் வந்து, சவுகத் அலிக்கு சொந்தமானது உட்பட மூன்று வீடுகள், சிவன் கோவில் மற்றும் ஆட்டோவை தீ வைத்து எரித்தனர். மாயமான அவரை போலீசார் தேடுகின்றனர்.பேரிடர் மீட்பு படை தளம் முடக்கம்புதுடில்லி: என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான டுவிட்டரில் நேற்று முன்தினம் சில தவறான செய்திகள் பதிவாயின. மீட்பு படையினரின் தகவல் பதிவாகவில்லை. இதையடுத்து தளம் முடக்கப்பட்டதை அதிகாரிகள் அறிந்தனர். அதனை சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கின
குற்றவாளிக்கு உதவி: 4 பேர் கைது
உத்தம்சிங் நகர்: பஞ்சாபின் பதான்கோட், லுாதியானாவில் கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சுக்ப்ரீத் தலைமறைவானார். இவருக்கு, உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் அடைக்கலம் கொடுத்ததாக ஷாம்ஷேர் சிங், அவரது சகோதரர் ஹர்பிரீத் சிங் உள்ளிட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை குழு அமைப்புமும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையின் மத்திய பகுதியின் 20 மாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் பலியானதுடன், 23 பேர் காயம் அடைந்தனர். தீ விபத்து குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில் நால்வர் குழு விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது
தமிழக நிகழ்வுகள்
ஊரடங்கை மீறியோரிடம் ரூ. 15,500 அபராதம்
அன்னுார்:ஊரடங்கு தடையை மீறியவர்களுக்கு, 15, ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அன்னுாரில், நேற்று ஊரடங்கை மீறி, சோமனுார் பிரிவில் ஒரு பேக்கரி செயல்பட்டது. வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் அபராதம் விதித்தபோது, அபராதம் செலுத்த மறுத்த பேக்கரி உரிமையாளர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து வருவாய்த் துறையினர், அன்னுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று, எச்சரித்து, அபராதம் விதித்தனர்.குன்னத்துார், கரியாம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதோரிடம் 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அன்னுார் போலீசார், முகக்கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதோரிடம் 5,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.நேற்று பல்வேறு காரணங்களை கூறி இரு சக்கர வாகனங்களில், ஏராளமானோர் வெளியே சுற்றினர். போலீசாரும் வருவாய் துறையினரும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்
.தனியார் மருத்துவமனைகளில் நேற்றும் கூட்டம் அலைமோதியது.பெ.நா.பாளையம்பெரியநாயக்கன்பாளையத்தில் முகக்கவசம் இன்றி, பொது இடங்களில் நடமாடிய, 120 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம், 200 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பெ.நா.பாளையம் போலீசார், கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையில், முகக்கவசம் அணியாமல், பொது இடங்களில் நடமாடிய, 120 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தலா, 500 ரூபாய் என, 60 ஆயிரம் ரூபாயை அபராதமாக வசூலித்தனர்.தொடர்ந்து சோதனை நடத்தப்படும். விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
![]()
|
குப்பையிலிருந்து பெண் சிசு மீட்பு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு குப்பையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
மார்க்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு குப்பை கொட்ட சென்றார். அப்போது குப்பையில் இருந்த கட்டைப் பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. பொதுமக்கள் குழந்தையை மீட்டு இடையகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல்லில் தொட்டில் குழந்தை திட்ட காப்பகத்திற்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தீப் பற்றி பெண் பலி
சாணார்பட்டி :: - சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் சமைக்கும் போது உடலில் தீப்பிடித்த பெண் இறந்தார்.
கொசவபட்டியில் வசிப்பவர் ஜோசப் பன்னீர்செல்வம். மனைவி ஆரோக்கிய ராணி 33. இவர் ஜன.19ம் தேதி விறகு அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆடையில் தீப்பற்றி, உடலில் தீப்பிடித்தது. இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து காப்பாற்ற முயன்ற கணவர் ஜோசப் பன்னீர்செல்வத்திற்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆரோக்கிய ராணியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
![]() Advertisement
|
விருதுநகரில் பஞ்சாலையில் தீவிபத்து
விருதுநகர்-விருதுநகர் அருகே பஞ்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகர் பேராலி ரோட்டில் அல்லம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் 39 என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி ஜின்னிங் மில் இயங்கி வருகிறது.
மதிய உணவு சாப்பிடுவதற்காக மேற்பார்வையாளர் பிரிதிவிராஜ் வீட்டிற்கு சென்று விட்டு மதியம் 2:30 மணிக்கு திரும்பி வந்து பார்க்கையில் நுாற்பாலை எரிந்து கொண்டிருந்தது. உரிமையாளருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்களும், 7 இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன.ஊரடங்கு காரணத்தால் ஊழியர்கள் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. தீவிபத்திற்கு மின் கசிவு காரணம் என போலீசார் தெரிவித்தனர். விருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
![]()
|
பெரியகுளம் அருகே யானை தந்தங்கள் விற்க முயன்ற 9 பேர் கைது
தேவதானப்பட்டி--தேவதானப்பட்டி அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் கும்பல் தாக்கியதில் வனக்காவலர் காயமடைந்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 30. அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் பாலமுருகன் 35, பிரகாஷ் 29, பாக்யராஜ் 30, முத்தையா 57, வத்தலகுண்டு அப்துல்லா 34. உசிலம்பட்டியை சேர்ந்த சிவகுமார் 42, சின்னராஜ் 29, தேனியைச் சேர்ந்த சரத்குமார் 30, விஜயகுமார் 60, ஆகிய பத்து பேர் இரண்டு யானை தந்தங்களை (920 கிராம் 970 கிராம் எடை) வைத்துக்கொண்டு விற்பனை செய்ய தேனி திண்டுக்கல் மாவட்டத்தில் 10நாட்களாக சிலரிடம் விலைபேசியுள்ளனர்
கடத்தல் கும்பலில் ஒருவர் கொடைக்கானல் வனக்கோட்டததை சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஒருவரிடம் அவர் யார் என்ற விவரம் தெரியாமல் அலைபேசியில் யானைத் தந்தம் விலை விவரம் கேட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அலுவலர் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டிற்கு கொண்டு வாருங்கள் விலையை தீர்மானம் செய்யலாம் என்றார். நேற்று காலை 5:45 மணிக்கு வேனில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் காத்திருந்தனர். இதில் சுரேஷ் இந்தப் பகுதியில் தேவதானப்பட்டி ரேஞ்சர் அலுவலகம் உள்ளது. நாம் மாட்டிக்கொள்வோம் என சந்தேகித்துள்ளார். இவர் சுதாரிப்பதற்குள் ரேஞ்சர் டேவிட் ராஜா மற்றும் பெரும்பள்ளத்தை சேர்ந்த 25 பேர் கொண்ட வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து கடத்தல் கும்பலை சுற்றிவளைத்தனர்.
இதில் வனக்காப்பாளர் கருப்பையாவை சுரேஷ் தாக்கி தப்பினார். கருப்பையா மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 9 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரண்டு யானை தந்தங்களும் தேனி மாவட்டத்தில் ஜமீன்தார் வீட்டிலிருந்து திருடப்பட்டதா அல்லது யானையைக் கொன்று திருடப்பட்டதா என வனத்துறையினர் விசாரிக்கின்றனர். டேவிட் ராஜா கூறுகையில்: இரண்டும் ஒரே யானையின் தந்தங்கள் ஆகும். முக்கிய குற்றவாளியான சுரேஷை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். விரைவில் பிடி படுவார் என்றார்.
![]()
|
தொழிலாளி கொலை 2 வாலிபர்கள் கைது
ஓசூர்-காதல் விவகாரத்தில், தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். காதலியின் அண்ணன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம் நகர் ஏ.எஸ்.டி.சி., பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 19; சென்ட்ரிங் தொழிலாளி, 19. இவர், பள்ளி மாணவி ஒருவரை காதலித்தார். அவரை, மாணவியின் அண்ணன் சந்தோஷ்குமார், 19, பல முறை கண்டித்துள்ளார்.இந்நிலையில், வினோத்குமார், மாணவியின் அண்ணன் சந்தோஷ்குமாருக்கு போன் செய்து, அவரது தங்கை குறித்து, மது போதையில் அவதுாறாக பேசியுள்ளார்.
ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், தன் நண்பர் சுல்தான், 19, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வினோத்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த, அவரது 18 வயது நண்பரையும் கத்தியால் குத்தினார்.ஓசூர் டவுன் போலீசார், சந்தோஷ்குமார், சுல்தான் ஆகியோரை நேற்று கைது செய்தனர்
.

காட்டில் சண்டை ஆண் யானை பலி
ஓசூர்-அஞ்செட்டி
அருகே, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், ஆண் யானை
உயிரிழந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரகர் சீத்தாராமன்
மற்றும் வனத்துறையினர், நேற்று முன்தினம் மஞ்சி காப்புக்காட்டில் ரோந்து
சென்றனர். நீரோடையில், 17 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.
தந்தங்கள் அப்படியே இருந்தன.பிரேத பரிசோதனையில், யானை உடலில் உள் காயங்கள்
இருந்தது தெரிந்தது. 'மற்றொரு யானையுடன் ஏற்பட்ட சண்டையில், தாக்கப்பட்டு
உயிரிழந்திருக்கலாம்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE