தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை என, தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டங்களை முன்னின்று நடத்தும், தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் அளித்த பேட்டி:திருக்காட்டுப்பள்ளி மைக்கேல் பட்டியில் இருக்கும், துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, மதம் மாறச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்கும் விபரம், ௧௭ வயது மாணவி ஒருவரின் மரணத்துக்குப் பின் வெளி வந்திருக்கிறது.
வடுகப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த ஏழைப் பெண், விடுதியில் தங்கி படித்தார். அங்கு விடுதி காப்பாளராக இருந்த சகாய மேரியால் ஏகப்பட்ட தொல்லை. ஆனால், அந்த விபரத்தை அவர் வெளியில் சொல்லவில்லை. 'சொன்னால், டி.சி., கொடுத்து விடுவோம்' என பள்ளி நிர்வாகம் தரப்பில் மிரட்டி உள்ளனர்; பயந்து போய் சொல்லவில்லை. அதையடுத்தே, அந்த மாணவி களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டிருக்கிறார்.
உடல்நிலை மோசமடைய, பெற்றோரை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். உடல்நிலை மேலும் மோசம் அடைய, தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார். அங்குதான், அவர் களைக்கொல்லி மருந்தை சாப்பிட்ட விபரத்தை சொல்லி இருக்கிறார். துவக்கத்தில், வார்டன் தொல்லையால் தான் களைக்கொல்லி மருந்து சாப்பிட்டதாகச் சொன்னவர், பின், அவரது உறவினர் வந்து கேட்டதும் தான், மதம் மாறச்சொல்லி வற்புறுத்திய விபரத்தை கூறி இருக்கிறார்.இதற்கிடையில், போலீஸ் தரப்பில், மாஜிஸ்திரேட்டை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்தான் மரண வாக்குமூலம் வாங்கி இருக்கிறார். அவரிடமும், வார்டன் பிரச்னையால் தான் தற்கொலைக்கு முயன்றாக மாணவி கூறி இருக்கிறார். பின், பிரச்னையை மூடி மறைக்கின்றனர் என்றதும், மாணவியின் உறவினர், சிகிச்சையில் இருந்தவரிடம் விசாரித்து, அவர் கூறிய விஷயங்களை வீடியோவில் பதிவு செய்தார்.
அப்போது தான், தன்னை மதம் மாற்றம் செய்ய, பள்ளியில் வார்டன் சகாயமேரியும், சிஸ்டர் ரக்லின் மேரியும் கட்டாயப்படுத்தியதை கூறி இருக்கிறார். வறுமையில் பள்ளிக்கு படிக்க வரும் மாணவியரை, பள்ளியில் மதம் மாறும்படி அழுத்தம் கொடுப்பதால் தான், வடுகப்பாளையும் மாணவி இறந்து போனார் என்றதும், இந்த விஷயத்தை பா.ஜ.,வின் கவனத்துக்கு எடுத்து வந்தனர். உடனே, அந்த வீடியோ பதிவை போலீசிடம் கொடுத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரினோம். துவக்கத்தில் நியாயமாக விசாரிப்பதாக உறுதி அளித்த தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்ரியா, உறுதியளித்த சில நிமிடங்களிலேயே, மாணவி மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதில் மதமாற்ற முயற்சி எதுவும் இல்லை என்றும், பத்திரிகைகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பின் தான், அரசிடம் நியாயம் கிடைக்காது என முடிவெடுத்து, பா.ஜ., இதில் முழு வேகத்தில் களம் இறங்கியது. பெற்றோரும் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என, போராட்ட களத்துக்கு வந்தனர். போலீசார், விசாரணை என்ற பெயரில் மாணவியின் பெற்றோரை மிரட்டி உள்ளனர். ஆனால், அவர்கள் அதற்கு அஞ்சாமல் நியாயத்துக்காக போராட துவங்கினர். மைக்கேல்பட்டி பள்ளியில் படித்த பல மாணவியருக்கு மத மாற்ற அச்சுறுத்தல் இருந்திருக்கிறது. இதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவிக்கும், மதம் மாறும்படி அழுத்தம் கொடுத்ததில், அவரும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், அவர் பிழைத்து விட்டார்; அவரும் எங்களோடு பேசியுள்ளார். போலீஸ் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்ட பல மாணவியரையும், பெண்களையும் போராட்ட களத்துக்கு அழைத்து வருவோம். பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பதை பிரதானமாக வைத்துக் கொள்ளாமல், மதம் மாற்ற முயற்சிப்பது ஏன்? நெருக்கடியில் இருக்கும் அரசு, 60 வயதை கடந்த சகாயமேரியை கைது செய்திருக்கிறது.
ரக்லின்மேரி பக்கம் போகவே இல்லை. நியாயம் கிடைக்கும் வரை, தமிழக பா.ஜ., இவ்விஷயத்தை விடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மதம் மாற்ற அழுத்தத்துக்கு ஆளாகி, இனியொரு மாணவி தற்கொலை செய்துக் கொள்ளக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
மாணவியின் வாக்குமூலம் என்ன?
மாணவி இறப்பதற்கு ஒரு நாள் முன், மாஜிஸ்திரேட் முகம்மது அலியிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதை மரண வாக்குமூலமாக எடுத்துக் கொண்டுள்ளனர். மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலம்:நான், திருக்காட்டுப்பள்ளி மைக்கேல் பட்டியில் உள்ள துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். அங்குள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அங்கு சகாயமேரி என்ற சிஸ்டர் தான், ஹாஸ்டலை பார்த்துக் கொள்ளும் வார்டனாக இருப்பார். அவர், என்னை மட்டும் ஹாஸ்டலில் உள்ள கணக்குகளை பராமரிக்கச் சொல்வார்.
'பில்'களை நோட்டில் எழுதி, அதை கண்காணிக்கும் வேலையைச் செய்யச் சொல்வார். நான் என்னதான் சிறப்பாக வேலை செய்தாலும், என்னை திட்டுவார். விடுமுறை நாளில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார். இது தொடர்பாக என் பெற்றோர், சகாயமேரியிடம் கேட்டனர். அதற்கு, இங்கு தங்கி இருந்தால் தான், ஒழுங்காகப் படிப்பேன் என சொல்லி விடுவார். படிக்கும் வேலை நிறைய இருந்தால், வார்டன் உத்தரவுப்படி, கணக்கு பராமரிப்பை செய்ய முடியாது.
அதனால், வற்புறுத்தினாலும் செய்ய மறுத்து விடுவேன். அதற்காக, என்னை வார்டன் திட்டுவார். 'நான்கு ஆண்டுகளாக கணக்குகளை பராமரித்தது நீதான். தொடர்ந்தும் நீ தான் அந்த வேலையை செய்ய வேண்டும்' என்று சொல்லி வற்புறுத்துவார். இப்படிச் சொல்லி, வீட்டுக்கு அனுப்பாமல் விடுதியிலேயே தங்க வைத்து விட்டார். இப்படி நிறைய சங்கடங்களை அனுபவித்தேன். இன்னும் ஓராண்டு படிப்பு பாக்கி இருக்கும் நிலையில், பிரச்னை இல்லாமல் கடத்த வேண்டும் என்று முடிவெடுத்து, அவர் சொன்னதை செய்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையிலும் கூட, விடுமுறை கொடுக்காமல் இருந்தார். 'வீட்டுக்குப் போகலைன்னா செத்து போயிட மாட்டே' என்று கூறி, என்னை மன ரீதியில் காயப்படுத்தினார். இவ்வளவுக்கும் மத்தியில், விடுதி கட்டணத்தையும் உயர்த்தினர்.
![]()
|
அதைத் தொடர்ந்தே, தஞ்சை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையளித்தனர். விடுதி காப்பாளர் சகாயமேரி, விடுதி தொடர்பான கணக்குகளை எழுதக்கூறி தொடர்ந்து, 'டார்ச்சர்' கொடுத்தார். அதையடுத்தே, களைக் கொல்லி மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றேன். என்னுடைய இந்த நிலைக்கு சகாயமேரி தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மாணவி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE