நிலம் கொடுத்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு தர வேண்டும்: பழனிசாமி

Added : ஜன 24, 2022
Advertisement
சென்னை-'என்.எல்.சி., நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கம் அமைக்க நிலம் வழங்கியோருக்கு, நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:என்.எல்.சி., என்று அழைக்கப்படும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தற்போது ௧௧ ஆயிரத்து ௫௧௦ நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய, ௪௪
 நிலம் கொடுத்தவர்களுக்கு நியாயமான  இழப்பீடு தர வேண்டும்: பழனிசாமி

சென்னை-'என்.எல்.சி., நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கம் அமைக்க நிலம் வழங்கியோருக்கு, நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:என்.எல்.சி., என்று அழைக்கப்படும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தற்போது ௧௧ ஆயிரத்து ௫௧௦ நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய, ௪௪ கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் யாரும் இன்று பணியில் இல்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.தற்போது என்.எல்.சி., நிறுவனம், தன் மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக, ௨௬ கிராமங்களில் ௧௨ ஆயிரத்து ௫௦௦ ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதை மக்கள் ஏற்கவில்லை. இழப்பீட்டு தொகையை நியாயமாக வழங்க வேண்டும்.ஏற்கனவே, இரண்டாவது சுரங்கத்திற்காக நிலம் வழங்கியவர்கள், நிலத்தின் மதிப்பை உயர்த்தவும், நிரந்தர வேலை கோரியும் என்.எல்.சி., நிறுவனத்திடம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நில உரிமையாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அப்பகுதி மக்களுக்கு நில இழப்பீடும், நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும்.ஏக்கர் ஒன்றுக்கு ௧கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த, அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க., தற்போது ஆளுங்கட்சியானதும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X