சென்னை--தமிழக தொல்லியல் துறையின் பிதாமகன் என புகழப்படும் அறிஞர் நாகசாமி, 91, வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுார் கிராமத்தை சேர்ந்தவர் நாகசாமி. தமிழக தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பதவியேற்று பல்வேறு ஆய்வுகளை மேற்Lகொண்டவர்.சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் வசித்த அவர், வயோதிகம் காரணமாக நேற்று மதியம் காலமானர்.
மறைந்த நாகசாமி, தமிழின் சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், சமஸ்கிருதம், வேதங்கள், இதிகாசங்கள் மற்றும் சாஸ்திரங்களில் ஆழ்ந்த புலமை வாய்ந்தவர்.தொல்லியல் துறையில் பணிபுரிந்த பல அறிஞர்களுக்கு களப்பயிற்சி அளித்த பெருமைக்குரியவர். தமிழ், ஆங்கிலத்தில் 120க்கும் மேற்பட்ட ஆய்வு நுால்களை எழுதி விருதுகள் பெற்றுள்ளார்.இவரின் வாழ்நாள் சாதனைக்காக தமிழக அரசு, 1995ல் கலைமாமணி விருதையும்; மத்திய அரசு 2018ல், பத்மபூஷன் விருதை யும் வழங்கி கவுரவித்தன.இரா.நாகசாமியின் மனைவி பார்வதி ஏற்கனவே காலமான நிலையில், அவருக்கு ராமச்சந்திரன், மோகன் என்ற மகன்களும், கலா, உமா என்ற மகள்களும் உள்ளனர். நாகசாமியின் இறுதிச் சடங்கை, 26ம் தேதி நடத்த, அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.பிரதமர் இரங்கல்பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:தமிழகத்தின் எழுச்சி மிக்க, கலாசாரத்தை பிரபலப்படுத்துவதில், நாகசாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள். வரலாறு மற்றும் தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்கள்.இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
வாழ்க்கை வரலாறுசமஸ்கிருதத்தில் முதுகலை பட்டமும், இந்திய கலையியலில் டாக்டர் பட்டமும் பெற்ற நாகசாமி, இந்திய கலை, தொல்லியல், கட்டடக்கலை, இலக்கியம், கல்வெட்டு, பழங்காலவியல், நாணயவியல், இசை, நடனம் மற்றும் தெற்காசிய கலைகளில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.கடந்த 1959 முதல் 1965 வரை, சென்னை அருங்காட்சியக கண்காணிப்பாளராக இருந்தார். 1965ல், மாநில தொல்லியல் துறையை உருவாக்கி அதன் இயக்குனரானார்; 1988ல் அத்துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.பின், மத்திய அரசின் கலை, கல்வெட்டு ஆய்வுகளுக்கான ஆலோசகராக சேர்ந்து, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கீழ், புதுச்சேரி கல்வெட்டு, தஞ்சை பிரகதீஸ்வரர் கலாசார சொத்தை ஆவணமாக்கும் பணிக்கு தலைமை ஏற்றார்.சாதனை ஏராளம்முதன்முதலில், பூம்புகாரில் கடலாய்வு செய்து, சங்க கால சோழர்களின் சான்றுகளை கண்டறிந்தார்.
தமிழகத்தில், பூண்டியில் வரலாற்றுக்கு முற்பட்ட கால அருங்காட்சியகம், ஆற்காட்டில் இஸ்லாமிய அருங்காட்சியகம் உள்ளிட்ட, 12 அருங்காட்சியகங்களை உருவாக்கினார். தமிழக தொல்லியல் துறையில், கல்வெட்டு மற்றும் கலை சார்ந்த முதுகலை படிப்பை துவக்கினார். பல்வேறு அரண்மனை தளங்களை கண்டறிந்து சீரமைத்தார். கங்கைகொண்ட சோழபுரம், மதுரை, தாராசுரம் போன்ற மரபுச்சின்னங்களை பிரபலப்படுத்தும் வகையில், அவை சார்ந்து தொடர் கட்டுரைகள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்தினார்.
அவ்விடங்களில் நடனம் மற்றும் இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை ஈர்த்தார்.ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், மணிமேகலை, அருணகிரிநாதர், அப்பர் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று, நடன நாடகங்களை இயற்றினார். அவற்றை, இந்திய மாநிலங்கள், ஜெர்மனி, ஸ்வீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரங்கேற்றினார்.நாட்டியாஞ்சலிதற்போது உலகப் புகழ்பெற்றுள்ள சிதம்பரம் நாட்டியாஞ்சலிகு, 24 ஆண்டுகளுக்கு முன் பிள்ளையார் சுழி போட்டவர் நாகசாமி தான். கரூர், அழகன்குளம், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில், பல முக்கிய அகழாய்வுகள் இவரால் நடத்தப்பட்டன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement