ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு நடவடிக்கை கோரி மனு தாக்கல்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (9)
Advertisement
புதுடில்லி-'ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசும் தலைவர்களை கைது செய்ய வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹிந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ளன. வெறுப்பு பேச்சுஉத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசும் தலைவர்களை கைது செய்ய வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹிந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ளன.



latest tamil news




வெறுப்பு பேச்சு



உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கோரி, இரண்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

ஹிந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:ஹரித்வார் மாநாட்டில் ஹிந்து தலைவர்களின் பேச்சுகள் ஹிந்து மதத்துக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கான பதில்கள் தான்; வெறுப்பு பேச்சுகள் இல்லை. ஹிந்து ஆன்மிக தலைவர்கள் மீது அவதுாறு ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர்களது பேச்சுகள் வெறுப்பு பேச்சுகளாக சித்தரிக்கப்படுகிறது. அசாதுதீன் ஓவைசி, வாரீஸ் பதான் உள்ளிட்ட தலைவர்கள் பலர் ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பை துாண்டும் வகையில் எப்போதும் பேசி வருகின்றனர். அவர்களை முதலில் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்


latest tamil news




நடவடிக்கை


நீதிக்கான ஹிந்து முன்னணி அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அதேபோல் ஹிந்துகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜன-202210:59:08 IST Report Abuse
duruvasar நாய் சேகர், பாட்டில் மணி, கைப்புள்ள, சரக்கு மாஸ்டர், ரஷ்ய சர்வாதிகாரி, புறமுதுகு பாண்டியன் என பலபேருக்கு பாதிப்பு வருமா ?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-ஜன-202210:34:15 IST Report Abuse
sankaseshan ஹிந்துக்களுக்கு எதிராக மனம் புண்படும்படி பேசினால் குற்றமில்ல்லை சகிப்புத்தன்மை வேண்டும் மற்ற மதத்தினருக்கு இது பொருந்தாது
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
24-ஜன-202208:24:52 IST Report Abuse
Nachiar இந்துக்களுக்கு எப்போ சுதந்திரம் சம உரிமை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X