பராமரிப்பு பணிகளுக்காக 35 ஆயிரம் ரயில்கள் ரத்து

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (5)
Advertisement
புதுடில்லி-நடப்பு 2021 - 2022 நிதிஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு, ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-நடப்பு 2021 - 2022 நிதிஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



latest tamil news



மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு, ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



கடந்தாண்டு ஏப்., - ஜூனில் 20 ஆயிரத்து 941 ரயில்களும், ஜூலை - செப்.,ல் 7,117 ரயில்களும், அக்., - டிச., மாதங்களில், 6,869 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.நீண்ட காலமாக ரயில் பாதைகள் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காலத்தை பயன்படுத்தி தண்டவாளங்கள் பராமரிப்பு வேகப்படுத்தப்பட்டது. அதனால் அதிக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202215:46:05 IST Report Abuse
ஆரூர் ரங் தினமும் ஒரு புது ரயிலு விடச்சொல்லி போராட்டம் நடத்துபவர்கள் பாதுகாப்பு அம்சங்களை முதலில் சரி செய்துவிட்டு பின்னர் புது ரயிலுக்கு கோரிக்கை🙄🤔 விடலாமே. பாதுகாப்பில்லாத பயணம் நமக்கெதற்கு?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜன-202210:52:18 IST Report Abuse
duruvasar தமிழ்நாடு மின்வாரியத்தை பார்த்து எ அப்பட்டமாக காப்பி அடிக்கிறார்கள். இங்கதான் கரெண்டே வராத காலத்திலும் வாரத்திற்கு இரண்டு முறை பராமரிப்பு பணி நடக்கிறது.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202206:22:18 IST Report Abuse
Mani . V மக்களின் வரிப்பணத்தில் பராமரித்தபின் தனியாருக்கு தாரை வார்க்கப்படும்.
Rate this:
24-ஜன-202215:48:27 IST Report Abuse
ஆரூர் ரங்தூர்தர்ஷன் என்ற அரசின் சேனல் ஒன்று போதுமே. தனியார் கார்போரட் சன் டிவியை அரசுடமையாக்க கோரி போராடுங்களேன்😅 தனியார் ஆம்னி பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்றுக்கொள்ள கோரிக்கை வைக்க முடியுமா? அப்புறம் சர்வீஸ் எப்படி இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X