காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம் ஏன்: அரசு விளக்கம்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (26)
Advertisement
புதுடில்லி-குடியரசு தின விழா முடிந்து, படையினர் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் பாடப்படும் மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் நீக்கப்பட்டுள்ளதற்கு அரசு விளக்கம் அளித்துள்ளது.நம் நாட்டின் சுதந்திரத்துடன் தொடர்புடைய பாடல் இடம்பெறுவதற்காகவே, அந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 26 பாடல்கள்நாட்டின் 73வது குடியரசு தினம் 26ம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-குடியரசு தின விழா முடிந்து, படையினர் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் பாடப்படும் மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் நீக்கப்பட்டுள்ளதற்கு அரசு விளக்கம் அளித்துள்ளது.நம் நாட்டின் சுதந்திரத்துடன் தொடர்புடைய பாடல் இடம்பெறுவதற்காகவே, அந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



26 பாடல்கள்நாட்டின் 73வது குடியரசு தினம் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரும் 29ம் தேதி படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியுடன், குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் நிறைவுக்கு வரும். படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியின்போது முப்படைகளின் இசைக் குழுவினர் பல பாடல்களை இசைக் கருவி கள் மூலம் வாசிப்பர்.இந்தாண்டு நிகழ்ச்சியில் இடம்பெற உள்ள 26 பாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது.

இதில், 1950ல் இருந்து இடம்பெற்று வந்த, 'அபைட் வித் மீ' என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து கவிஞர் ஹென்றி பிரான்சிஸ் லைட் 1847ல் இயற்றிய இந்தப் பாடல், மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.இந்தப் பாடல் தற்போது நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.


latest tamil news



நம் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில், நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் இடம் பெறுவதே பொருத்தமாக இருக்கும்.'அபைட் வித் மீ'கடந்த 1962ல் சீனாவுக்கு எதிரான போருக்குப் பின், நம் வீரர்களின் பெருமைகளை கூறும் வகையில் கவி பிரதாப் எழுதியுள்ள, 'ஏ மேரே வாதோன் கே லோகோன்' என்ற பாடல் இந்தாண்டு படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது; இது நம் நாட்டுடன் தொடர்புடையது.நம் நாட்டுடன் தொடர்பில்லாததால் 'அபைட் வித் மீ' பாடல் நீக்கப்பட்டுள்ளது. மஹாத்மா காந்தியை இழிவுபடுத்துவதற்காக செய்யப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202218:06:40 IST Report Abuse
சிவம் ஜனகண.. பாடல் அங்கிலேயனை போற்றி படப்பட்டதா...இவர் என்ன லூசா. போகட்டும். பல விஷயங்கள் இன்னமும் மேற்கத்தியன் விட்டு விட்டு போனவை தொடர்கின்றன. உதாரணம், பட்டமளிப்பு கவுன், நீதிமன்றங்களில் சில நடை முறைகள் போன்றவற்றையும் ஆராய்ந்து அவைகளையும் களை எடுக்க வேண்டும். மேல் நாட்டு வாடை வீசாத சட்டமன்றம் நம் தமிழக சட்டமன்றம். கேரளாவில் கூட அவ்வாறுதான் என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel
24-ஜன-202215:44:06 IST Report Abuse
ஆரூர் ரங் ஜனகணமண பாடல் பிரிட்டிஷ் அரசரைப் போற்றி எழுதப்பட்ட பாடல் அதுவா தேசபக்தி பாடல்? எந்த🙄 நாட்டிலாவது இந்தக் கொடுமை உண்டா? எது எதற்கோ. போராடும் திராவிஷக் கட்சிகள் ஒரு தமிழ் பாடலை தேசிய கீதமாக அறிவிக்க போராடலாமே ஏராளமான பாரதியார் பாடல்கள் உள்ளனவே
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
24-ஜன-202214:22:05 IST Report Abuse
pradeesh parthasarathy /...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X