எச்சரிக்கை!சமூக பரவலாக மாறியது 'ஒமைக்ரான்'; 'இன்சாகாக்' அமைப்பு ஆய்வில் தகவல்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி-நம் நாட்டில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாக, மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், 'இன்சாகாக்' எனப்படும் மரபணு வரிசை முறை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. மெட்ரோ எனப்படும் பெரு நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-நம் நாட்டில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாக, மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், 'இன்சாகாக்' எனப்படும் மரபணு வரிசை முறை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. மெட்ரோ எனப்படும் பெரு நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news


இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நம் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாக, மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்சாகாக் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது. அனைத்து மெட்ரோ நகரங்களிலும் அது வேகமாக பரவி வருகிது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டில்லி மற்றும் மும்பையில் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி, வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களால் அல்லாமல், உள்நாட்டு மக்களிடையே ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும்.எனினும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை; பலருக்கு சிறிய அறிகுறிகள் மட்டுமே உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி கடந்த 7 - 13 வரையிலான நாட்களில், 2.2 விகிதமாக பதிவான பாதிப்பு அளவு தற்போது 1.57 விகிதமாக குறைந்து உள்ளது.அதேநேரத்தில் அடுத்த 14 நாட்களில், தேசிய அளவிலான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்றும் ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

மருத்துவமனையில் 50 பேருக்கு தொற்றுகுஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலி யர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். மனசோர்வில் டாக்டர்கள்கொரோனா வைரசின் இரண்டாம் அலையின்போது நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.


latest tamil news



அப்போது ஆக்சிஜன், ஐ.சி.யு., படுக்கைகள் ஆகியவற்றின் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்ற, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் போராடினர்; பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த கொரோனா பரவல், மருத்துவ ஊழியர்களுக்கு உடல் சோர்வு மற்றும் மன சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது மூன்றாம் அலை வேகமெடுத்துள்ளதால், மீண்டும் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


துணை ஜனாதிபதிக்கு கொரோனா

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள தன் வீட்டில், அவர் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார். அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் தனித்து இருக்க உள்ளதாக, சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202215:39:09 IST Report Abuse
ஆரூர் ரங் சமூகநீதி காக்கும்😇 ஓமைக்கிறான்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202206:19:20 IST Report Abuse
Mani . V எங்களுக்கு கவலையில்லை - சோமபான கடை இருக்கிறது ஞாயிற்றுக்கிழமை உள்பட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X