'மாஜி' முதல்வருடன் ம.பி., முதல்வர் சந்திப்பு

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (2)
Advertisement
போபால்-மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கை, முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று சந்தித்தார். இழப்பீடுமத்திய பிரதேசத்தில் புதிய அணை கட்டும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பேசுவதற்கு, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தன்னை சந்திக்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால்-மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கை, முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று சந்தித்தார்.



latest tamil news



இழப்பீடு

மத்திய பிரதேசத்தில் புதிய அணை கட்டும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பேசுவதற்கு, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தன்னை சந்திக்க மறுப்பதாக, முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக போபாலில் முதல்வர் அலுவலகம் முன் சமீபத்தில் அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.


latest tamil news


இந்நிலையில் முதல்வர் இல்லத்தில் சவுகான் - திக்விஜய் சிங் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது காங்., மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் உடன் இருந்தார்.கணக்கெடுப்புஇது குறித்து கமல்நாத் கூறியதாவது:மாநிலத்தில் தேம் மற்றும் சுதாலியா பாசனத் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு மற்றும் இழப்பீடு பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து முதல்வரிடம் தெரிவித்தோம். உரங்கள், விதைகள் மற்றும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆனால், பெரிய திட்டங்களுக்காக அவர்களின் நிலம் பறிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜன-202210:43:38 IST Report Abuse
duruvasar இரண்டாண்டுகளுக்கு முன் திருமணம் செய்த இளம் மனைவி தங்களுக்கு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே வேண்டாத டென்ஷனை ஏற்றிக்கொள்ளாதீர்கள் திக்விஜய்
Rate this:
Cancel
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
24-ஜன-202208:24:23 IST Report Abuse
Bush உரங்கள், விதைகள் மற்றும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆனால், பெரிய திட்டங்களுக்காக அவர்களின் நிலம் பறிக்கப்படுகிறது.. தக்காளி வெங்காயம் விலை ஏறினால் போராட்டம் நடத்துவாங்க ..குவாட்டர் நூறு ரூபா கொடுத்து வாங்குவாங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X