அமைச்சர் பதவி பறிப்பு ஏன்?: பிரிட்டன் எம்.பி., விளக்கம்!

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (12)
Advertisement
லண்டன்-''நான் முஸ்லிம் என்பதால் எனக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறி போனது,'' என, பிரிட்டன் எம்.பி., நஸ்ரத் கனி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் எம்.பி.,யான நஸ்ரத் கனி, 2018ல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2020

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன்-''நான் முஸ்லிம் என்பதால் எனக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறி போனது,'' என, பிரிட்டன் எம்.பி., நஸ்ரத் கனி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.latest tamil news


ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் எம்.பி.,யான நஸ்ரத் கனி, 2018ல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2020 பிப்ரவரியில் போரிஸ் ஜான்சன், அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அப்போது, நஸ்ரத் கனிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இது குறித்து நஸ்ரத் கனி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:பிரிட்டன் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது கட்சியின் பார்லி., கொறடா எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம் என்பதால் என்னுடன் பேச, கட்சி எம்.பி.,க்களுக்கு அசவுகரியமாக உள்ளதாக, அதற்கு காரணம் கூறினார். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் என் எதிர்கால அரசியல் வாழ்வு பாழாகக் கூடும் என, சிலர் எச்சரித்தனர்.


latest tamil news


அதனால் நான் மவுனமாக இருந்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.நஸ்ரத் கனியின் இந்த குற்றச்சாட்டை பழமைவாத கட்சியின் பார்லி., கொறடா மார்க் ஸ்பென்சர் மறுத்துள்ளார். பழமைவாத கட்சியில் மத, இன பாகுபாடு கிடையாது என்றம் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஏற்கனவே 'பார்ட்டி' பிரச்னையில் சிக்கியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நஸ்ரத் கனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்து, பின் பிரிட்டனில் குடியேறியவர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24-ஜன-202220:30:04 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam Conservative Party இல் மற்றக் கட்சிகளைவிட இனத்துவேசம் மிகவும் குறைவு. Baroness Thatcher, Sir John Major, Mr David Cameron, Lady May, போன்ற முன்னாள் பிரதமர்களை உதாரணமாகச் சொல்லலாம். Mr Boris Johnson அவர்களும் இனத்துவேசி அல்ல.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-ஜன-202217:01:05 IST Report Abuse
Indhuindian பாகிஸ்தானுக்கு போங்க அங்கே இம்ரான் கான்னு ஒருத்தர் இருக்காரு அவர் உடனே மந்திரி ஆக்கிடுவார்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
24-ஜன-202215:39:26 IST Report Abuse
DVRR இங்கிலாந்தில் ஒரு பெண் என்று பார்த்தால் அவள் ஆசாத் காஷ்மீரில் பிறந்தவளாம் அதான் DNA சரியாத்தான் இருக்கு . இங்கே ஒருவன் ஒருத்திக்கு ஏதாவது ஒன்று என்றால் தப்பிக்க முதலில் அவர்கள் சொல்வது நான் முஸ்லீம் நான் கிருத்துவன் நான் SC/ST அதற்குத்தான் எங்களை இப்படி மோசமாக நடத்துகிறார்கள் என்று ???இப்படி சொல்லி தப்பிப்பதற்கு . இவள் செய்தது இப்படி சொன்னாலாவது இவளுக்கு மறுபடியும் பதவி கிடைத்து விடுமோ என்ற நப்பாசையில் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X