வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி படங்கள் மூலமாகத் தான், எம்.ஜி.ஆர்., பிரபலமானார்' என்று திருவாய் மலர்ந்துள்ளார், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி.
ஆனால், எம்.ஜி.ஆரால் தான், தி.மு.க.,வே பிரபலமடைந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.எம்.ஜி.ஆரின் செல்வாக்கும், அவரது படங்களும் தான், பட்டி தொட்டி எங்கும் தி.மு.க., பிரபலமடைய காரணம் என்பது, பாமரனுக்கும் தெரியும்; ஆர்.எஸ்.பாரதிக்கு மட்டும் தெரியாதா என்ன?
எம்.ஜி.ஆர்., படத்தில் இடம்பெறும் பாடல், வசனம் மற்றும் உடையில் கூட, தி.மு.க., குறியீடு இருக்கும். தி.மு.க.,வின் வளர்ச்சிக்காக, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், உதயசூரியனின் பார்வையிலே...' என பல பாடல்களை தன் படங்களில் இடம் பெறச் செய்தவர், எம்.ஜி.ஆர்., என்பதை, முதல்வர் ஸ்டாலின் கூட மறுக்க மாட்டார்.
அது மட்டுமல்லாது, தி.மு.க.,வின் தேர்தல் வெற்றிக்கு எல்லாம் எம்.ஜி.ஆரே முக்கிய காரணமாக இருந்ததை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் தான் எம்.ஜி.ஆரை, 'இதயக்கனி' என்று பாராட்டினார் அண்ணாதுரை. நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்த எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை காட்டி தானே, தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆருக்காகவே, தமிழக மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். எம்.ஜி.ஆர்., இல்லையென்றால் அண்ணாதுரையின் மறைவிற்கு பின், தி.மு.க.,வும் இருந்திருக்காது; கருணாநிதியும் முதல்வராகி இருக்க முடியாது.எம்.ஜி.ஆரின் ஆதரவால் தான், கருணாநிதி முதல்வர் ஆனார் என்பது, ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியுமா?வரலாறு படித்து தெளிந்த பின், ஆர்.எஸ்.பாரதி பேச வேண்டும். யாரால், யார் பிரபலமாகியது என்பதை வரலாறு கூறும்; அதை மூடி மறைக்க முடியாது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE