வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அபுதாபி: இந்தியர்கள் படுகொலையை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் ட்ரோன்களுக்குத் தடை விதித்துள்ளது.
![]()
|
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவ்தி புரட்சிகர போராட்டக்காரர்கள் அடிக்கடி வன்முறைத் தக்குதல் நடத்துவர். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த மத்தியதரைக்கடல் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது எதிர்பாரா தாக்குதல்களை நடத்தி வருவது வாடிக்கை. இதேபோல சமீபத்தில் அபுதாபி நகரில் இந்த அமைப்பு ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
இதனை அடுத்து விளையாட்டு மற்றும் தொழிலுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அபுதாபி நகரில் ட்ரோன்களை பறக்கவிட அந்நாட்டு அரசு ஒருமாத கால தடை விதித்துள்ளது. ஏமன் நாட்டுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சவுதி அரேபியா உடன் இணைந்து ராணுவ உதவி புரிந்து வருகிறது. இதனை ஈரான் விரும்பவில்லை.
![]()
|
இதன் காரணமாக ஹவுதி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. ஈரானின் உதவியுடன் இந்த அமைப்பு அவ்வப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலில் கச்சா எண்ணெய் பேரல்கள் சில, வெடித்து சிதறடிக்கப்பட்டன. இதனால் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சற்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement