பட்டாசு விபத்து இழப்பீடு; தீர்ப்பாய உத்தரவு ரத்து

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி-தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அச்சன்குளம் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் 2021 பிப்ரவரி 12ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்; இவர்களது வாரிசுகளுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.



latest tamil news


விருதுநகர் மாவட்டம் அச்சன்குளம் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் 2021 பிப்ரவரி 12ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்; இவர்களது வாரிசுகளுக்கு இழப்பீடாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் மனுதாரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், 'எக்ஸ் - பார்ட்டி' அடிப்படையில் இழப்பீடு தர உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


அதனால் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் நடத்தி, சட்டப்படி உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
crap - chennai,இந்தியா
24-ஜன-202215:07:25 IST Report Abuse
crap ஒண்ணுமே புரியல. எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு எப்பொழுது கொடுக்கப்படும்? எதிர் மனுதாரர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால். அதை உச்ச நீதிமன்றம் சரி என்கிறதா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜன-202208:41:54 IST Report Abuse
duruvasar எங்க ஊரிலேயை ஒரு எழுச்சி தெலுங்கு தமிழனும், கருஞ்சிறுத்தையும் அற்புதமாக நீதி வழங்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் வழக்கு சென்றிருந்தால் ஒரு கோடி ரூபாயும், அரசு வேலையும் வாங்கி கொடுத்திருப்பார்கள். பொழைக்க தெரியாதவங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X