சென்னை-தமிழகத்தில் எம்.பி. பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாகதுவங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 4,349; சுயநிதி கல்லுாரிகளில் 2,650 என, 6,999 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் 1,930 இடங்கள் உள்ளன. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரத்து 511 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14 ஆயிரத்து 777 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 288 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, அமைச்சர் சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார். இந்த விபரங்களை, https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ என்ற இணையதளங்களில் பார்க்கலாம். வரும் 27ம் தேதி மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும்; 28, 29ம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நேரடியாக நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், 30ம் தேதி முதல் இணையவழியில் நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE