வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், தேசத்தை முன்னேற்றவும், இளைஞர்கள் மற்றும் மக்கள் முன்வர வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை ராஜ்பவனில், நேதாஜியின் 125வது பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, அவரது உருவப் படத்திற்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: 'எனக்கு ரத்தம் கொடுங்கள்; நான் உங்களுக்கு விடுதலை தருகிறேன்' என்று நேதாஜி அறைகூவல் விடுத்தார். அவரது பேச்சால், ராணுவம் மற்றும் சுதந்திர இயக்கத்தில் சேர, இளைஞர்கள் ஊக்கம் பெற்றனர். இதுவே, இறுதியில் நம் நாட்டின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது.
நேதாஜியின் அறிவார்ந்த செயல்பாடுகள், மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டின. ஒரு நபர் தன் கொள்கைக்காக உயிரை துறக்கலாம். ஆனால், அந்த கொள்கையானது அவரது மரணத்திற்கு பிறகும், ஆயிரம் உயிர்களில் பிறப்பெடுக்கும்.சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், தேசத்தை முன்னேற்றவும், இளைஞர்கள் மற்றும் மக்கள் முன்வர வேண்டும்.சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், 'எப்போதும் தேசம் முதலில்' என்ற நேதாஜியின் கொள்கையை கடைப்பிடிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.இவ்வாறு ஆர்.என்.ரவி பேசினார்.இந்நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர்ஆனந்தராவ் பாட்டில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE