அரியலூர் மாணவிக்கு நீதி கேட்கும் பா.ஜ.,; தேசிய அளவில் 'ட்ரெண்ட்'

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (123) | |
Advertisement
கோவை: அரியலுார் மாணவிக்கு நீதி கேட்டு பா.ஜ., பதிவிட்ட 'ஹேஷ்டேக்' தேசிய அளவில் 'ட்ரெண்ட்' ஆனது.அரியலுார், வடுகர்பாளையம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி தஞ்சாவூர், மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில், மத மாற்ற முயற்சி காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ., உள்ளிட்ட

கோவை: அரியலுார் மாணவிக்கு நீதி கேட்டு பா.ஜ., பதிவிட்ட 'ஹேஷ்டேக்' தேசிய அளவில் 'ட்ரெண்ட்' ஆனது.
அரியலுார், வடுகர்பாளையம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி தஞ்சாவூர், மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில், மத மாற்ற முயற்சி காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.



latest tamil news



மாணவி மரண வாக்குமூலம் அளிக்கும் 'வீடியோ' ஒன்றையும் பா.ஜ.,வினர் 'ட்விட்டரில்' பதிவிட்டிருந்தனர். ஆனால், மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று தஞ்சாவூர் எஸ்.பி., ரவுளி பிரியா விளக்கம் அளித்துள்ளார்.மாணவி ஜன., 19ல் உயிரிழந்தார், முன்னதாக, 16ம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன்தொடர்ச்சியாக மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news



மாணவியின் மரண வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு ஒரு 'ஹேஷ்டேக்'கை பா.ஜ.,வினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த 'ஹேஷ்டேக்' தேசிய அளவில், 'ட்ரெண்ட்' ஆகியுள்ளது.
இதனிடையே, சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சாவூர் எஸ்.பி., மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
27-ஜன-202213:01:02 IST Report Abuse
Gandhi கட்டாய மத மாற்ற சட்டம் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரப்பட வேண்டும். ISISக்கு கிருத்துவ மிஷன் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. சிகப்பு இந்திய குழந்தைகளை கனடா அமெரிக்க அபார்ஜி குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் தங்களின் அனைத்து தேவைகளுக்கும் பலவந்தமாக பயன்படுத்திய கயவர்கள் கிருத்துவ மிஷன் நிர்வாகிகள். கனடா அமெரிக்க நாடுகளில் சிகப்பு இந்தியன் என்ற இனத்தை கூண்டோடு ஒழித்து கட்டிய பெருமை கிருத்துவ மிஷனுக்கு உள்ளது. ஆயிரக்கணக்கில் சிகப்பிந்திய குழந்தைகளை கொன்று புதைத்த அருளாளர்கள்.
Rate this:
Cancel
binakam - chennai,இந்தியா
26-ஜன-202210:18:26 IST Report Abuse
binakam மதம் மாறிய சிறுபான்மையினர் வாக்குரிமை ரத்து மிக சிறந்த தீர்வு. தமிழக அரசியல் சாக்கடை யானது தான் மிச்சசொச்சம்.
Rate this:
Cancel
binakam - chennai,இந்தியா
26-ஜன-202210:15:45 IST Report Abuse
binakam மதம் mariy
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X