வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'வீட்டு வாடகை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை, 120 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்' என்று அரசு 'கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில் வீடுகள், மனைகளை வாடகைக்கு விடுவது பரவலாக அதிகரித்து வருகிறது. காலி நிலங்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், உரிமையாளர்களால் வாடகை அல்லது குத்தகைக்கு விடப்படுகின்றன.
![]()
|
வாடகை, முன்பணம் மற்றும் குத்தகை தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கான வரையறை இல்லை. பல இடங்களில் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல் வீடு, மனைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.இதில், உரிமையாளர், வாடகைதாரர் இடையே எழும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், வாடகை வீட்டுவசதி சட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிகள், 2019ல் அமலுக்கு வந்தன.
![]()
|
இது குறித்து, வீட்டுவசதி துறை அதிகாரிகள் கூறியதாவது: மேல் முறையீட்டு வழக்குகளை, தீர்ப்பாயங்கள் 120 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும். இந்த கால வரையறை குறித்து, தீர்ப்பாயங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து, வேறு நீதிமன்றங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், வாடகை தொடர்பான வழக்குகளை, பல ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement