கோவையை நோக்கி ஐ.டி., நிறுவனங்கள் படையெடுப்பு: பெரும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிப்பு| Dinamalar

கோவையை நோக்கி ஐ.டி., நிறுவனங்கள் படையெடுப்பு: பெரும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிப்பு

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (17) | |
கோவை: தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) நிறுவனங்களின் கவனம் கோவை மீது திரும்பியுள்ளதால் முன்னணி நிறுவனங்கள் தங்கள் அலுவலக கட்டமைப்பை விரிவுபடுத்திவருவது, வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச அளவில் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில், பல்வேறு துறைகளிலும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பரவலால் பல்வேறு நிறுவனங்களின்


கோவை: தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) நிறுவனங்களின் கவனம் கோவை மீது திரும்பியுள்ளதால் முன்னணி நிறுவனங்கள் தங்கள் அலுவலக கட்டமைப்பை விரிவுபடுத்திவருவது, வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில், பல்வேறு துறைகளிலும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பரவலால் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தற்போது, 'டிஜிட்டல்' தேவையும் கூடியுள்ளது. பலரும் தங்களது வணிகத்தை 'டிஜிட்டல்' மயமாக்கி வருகின்றனர்.latest tamil news
இவற்றை எல்லாம் பாதுகாக்க, 'சைபர் செக்யூரிட்டி'களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. சர்வதேச அளவில் ஐ.டி., நிறுவனங்கள் பெரும் அளவிலான ஒப்பந்தங்களை செய்துள்ளன. இதனால், ஊழியர்களின் தேவையானது பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

நிறுவனங்களும் திறனுள்ள ஊழியர்களை அதிகளவு சம்பளம் என பல சலு கைகளை கொடுத்து பணியமர்த்தி கொண்டு இருக்கின்றன. அதேநேரம் ஊழியர்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் போக்கும் காணப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியில் 'டிஜிட்டல்' தேவையும் அதிகரித்து வருவதால் ஒப்பந்தங்கள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஐ.டி., நிறுவனங்கள் தங்களின் உள்கட்டமைப்புகளில் மாற்றங்களை சில இடங்களில் செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை கோவையில் நிறுவிவருகின்றன. இதனால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொழில் துறையினர் உள்ளனர்.


latest tamil news
ஐ.டி., வல்லுனர்கள் கூறியதாவது:
கொரோனா மத்தியில் பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள், ஐ.டி., சார்ந்த நிறுவனங்கள் இரண்டாம் கட்ட நகரங்களில்(டயர்- 2) தங்கள் அலுவலகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கொரோனா வருகைக்கு பின், ஐ.டி., நிறுவனங்களின் கவனம் தமிழகத்தில் கோவை பக்கம் திரும்பியுள்ளன. இதனால், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என பெரும் வளர்ச்சிக்காண உதவிகரமாக இருக்கும்.

ஏற்கனவே சென்னை வெள்ளத்துக்கு பின் பல நிறுவனங்கள் கோவையை அதன் முதல் தேர்வாக வைத்திருந்தன. முன்னணி ஐ.டி., நிறுவனம் ஒன்று கோவையில் புதிய அலுவலகத்தை நிறுவி வருகிறது. இது விரைவில் திறக்கப்படலாம். அதேபோன்று மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கோவையில் தனது அலுவலகத்தினை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X