'பாம்பின் கால் பாம்பறியும்' என்பரே... அது, இது தானா என்ற கேள்வி எழுகிறதே!

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (6)
Advertisement
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் கூறியிருப்பது, வெறும் கண்துடைப்பு நாடகம். இதெல்லாம் மக்களை ஏமாற்ற செய்யும் வேலை.'பாம்பின் கால் பாம்பறியும்' என்பரே... அது, இது தானா என்ற கேள்வி எழுகிறதே!த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்பேட்டி: பஞ்சு, நுால் விலை உயர்வால்
தினகரன், இப்ராகிம்

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் கூறியிருப்பது, வெறும் கண்துடைப்பு நாடகம். இதெல்லாம் மக்களை ஏமாற்ற செய்யும் வேலை.


'பாம்பின் கால் பாம்பறியும்' என்பரே... அது, இது தானா என்ற கேள்வி எழுகிறதே!



த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்பேட்டி:
பஞ்சு, நுால் விலை உயர்வால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில், பல லட்சம் ஜவுளி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எனவே, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நுால் இறக்குமதிக்கான வரியையும் நீக்க வேண்டும்.


பெட்ரோல், டீசல், மதுபான விலை உயர்வு என்றால் கட்சிகள் கொடி பிடிக்கும். அப்பாவி ஜவுளி தொழிலாளர், நெசவாளர்களை கண்டுகொள்வார் யாருமில்லையே!



பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம்பேட்டி
: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி, விவசாயிக்கு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 'நீட்' தேர்வு ரத்து, மதுக்கடைகள் மூடப்படும் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. ஆட்சிக்கு வந்து, எட்டு மாதங்களாகியும் நிறைவேற்ற முடியவில்லை.


பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறாரே... அப்போது அது பொய்யா இப்ராகிம்?



இந்திய கம்யூ., மாநில தலைவர் முத்தரசன் பேட்டி: மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், அக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் கவர்னர்கள், ஒற்றர்களாக பயன்படுத்தப் படுகின்றனர். இது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.


எந்த கவர்னராவது உங்களிடம்இப்படி சொன்னாரா... அல்லது எந்த மாநிலத்திலாவது, இந்திய கம்யூனிஸ்ட்காரர்கள் கவர்னர்களாக இருந்தனரா; சும்மா அவிழ்த்து விடாதீர்கள் சார்!



தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்அறிக்கை: 1988ல் இந்தியா வந்த போது, 'என்னால் முடியும்' என்றேன். பிறகு, 'கடவுளே, உன் துணையோடு என்னால் முடியும்' என்றேன். இப்போது, 'கடவுளே உன்னால் மட்டும் தான், அரசியலில் எனக்கு பதவி கிடைத்து, நாட்டுமக்களுக்கு மேலும் உதவ முடியும்' என்று புரிந்து கொள்கிறேன்; அவனன்றி ஓர் அணுவும் அசையாது.


latest tamil news




நீங்கள் இருக்க வேண்டிய கட்சி, காங்கிரஸ் அல்ல; பா.ஜ., போல தெரிகிறதே!



ஹைதராபாதின் ஏ.ஐ.எம். இ.ஐ.எம்., என்ற முஸ்லிம் கட்சியின் எம்.பி., ஒவைசி: உ.பி.,யில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், இரண்டு முதல்வர்கள் இருப்பர். அதில் ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராகவும், இன்னொருவர் பட்டியல் இனத்தவராகவும் இருப்பார். இஸ்லாமியர் உட்பட மூன்று பேர், துணை முதல்வர்களாகவும் இருப்பர்.


உ.பி.,யில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே உங்கள் கட்சி ஆட்சிக்கு வர முடியாது என நன்கு தெரிந்து கொண்டு, 'அள்ளி' விடுகிறீர்களா?


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜன-202202:37:32 IST Report Abuse
Bhaskaran நம்ம கிட்டேயே பொங்கல் பாரிஸில் இவ்வளவு ஆட்டையைப்போட்ட அதிகாரிங்க அதிமுக அரசில் எவ்வளவு ஆட்டையைபோட்டிருப்பாங்கன்னு மலைச்சிபோயிட்டிங்களோ
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
24-ஜன-202218:27:44 IST Report Abuse
M  Ramachandran கம்யூனிஸ்டுக்கள் இனி வாய் திறக்கக்கூடாது தீ மு க்கா விடம் கையீந்தி விட்டனர். அதனால் அவர்களுக்கு அடிமையை சாசனம் எழுதி கொடுத்தாதது போனால் தான். அவர்களைய6 இனி ஜென்மத்துக்கும் விமர்சிக்க முடியாது. இளிச்ச வாயர்களை மட்டும் தான் விமர்சிக்க முடியும். அங்க்கே சீன காரன் எல்லையில் குடைய்ச்சல் கொடுக்கிறானென நீங்கள் ( முதுகெலும்பு உள்ளதா ) நாட்டு பற்று உடையவர் என்றால் கண்டித்து ஒரு அறிக்கையானது கொடுத்தீர்களா? ஆதனால் வாஙகிய பணத்திற்கு தீ மு காவிடம் மட்டும் குழலைந்து பேராசிக்கொண்டிருங்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-ஜன-202216:48:19 IST Report Abuse
sankaseshan வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று முதல்வர் சொன்னால் போறுமா? மக்கள் நம்ப வேண்டாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X