சென்னை: வட பழநி ஆண்டவரை தரிசிக்க இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று (ஜன.23) கும்பாபிஷே கம் நடந்து முடிந்தது. ஊரடங்கு காரணமாக நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பக்தர்கள் தரிசித்தனர். இன்று முதல் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை வணங்கி சென்றனர். பக்தர்கள் தரிசிக்க கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE