26ல் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு! உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருமா?

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் விதித்த கெடு, 26ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் நடத்த
Tamilnadu, Local Body Elections, Supreme Court, தமிழகம், தமிழ்நாடு, உள்ளாட்சி தேர்தல், உச்சநீதிமன்றம், கெடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் விதித்த கெடு, 26ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் நடத்த வேண்டிஉள்ளது. இதற்கான பணிகளை, மாநில தேர்தல் கமிஷன் 2021 அக்டோபர் முதலே மேற்கொண்டு வருகிறது.


ரூ.230 கோடி


இத்தேர்தலை, ஜன., 26க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, அதற்கான முன்னேற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தேர்தலை நடத்த தேவையான 230 கோடி ரூபாய் நிதியை, அரசிடம் பெறுவதற்கான முயற்சியும் நடந்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வினியோகம்; இலவச வேட்டி, சேலைகளும், ரொக்க பணமும் வழங்காதது; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காதது உள்ளிட்டவை, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.


latest tamil news



பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தால், எட்டு மாதங்களாக முதல்வர் மீதும், அரசின் மீதும் இருந்த நன்மதிப்பு மக்கள் மத்தியில் சற்று குறைந்து உள்ளது. இப்பிரச்னையை, சமூக வலைதளங்கள் வாயிலாக அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் எடுத்துச் சென்றுள்ளன. இது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது. இந்தப் பிரச்னைகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்புள்ளதாக உளவுத்துறை கணித்துள்ளது. எனவே, மக்களை திருப்திப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை அரசிற்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, கடும் நிதி நெருக்கடியில் அரசு தத்தளித்து வருகிறது.

இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதற்கான சாத்தியகூறுகள் குறித்து, நிதித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, ஆளும் கட்சியினர் 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெறுவது வழக்கம். தி.மு.க., அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால், அக்கட்சி வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது. தேர்தலை விரைந்து அறிவிக்க வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷன் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


latest tamil news




எதிர்பார்ப்பு


இது, ஆளுங்கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்தலை சந்திக்க தி.மு.க., தலைமை சற்று தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிய இரண்டு நாளே உள்ளதால், தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202212:21:06 IST Report Abuse
அநேமதேயம் இதனால் தான் உச்சநீதிமன்றம் தமிழகத்தில் கிளையை நிற்க்க வேண்டும் அப்போது தான் எங்கள் விருப்பத்திற்குரிய நீதிபதி நீதிபரிபாலனம் நடக்கும் என்று திமுக மற்றும் மம்தா சிவசேனா போன்ற மாநில கட்சிகள் கோருகின்றண
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X