தனியார் மூலம் 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவு

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (2)
Advertisement
கோவை: வெளி நபர்கள் மூலம் தொலைநிலை கல்வி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது. பல்கலைகள், கல்லுாரிகள் சார்பில் தொலை நிலை கல்வி இயக்ககம் மற்றும் ஆன்லைன் வழிக்கல்வி சான்றிதழ், பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தொலை நிலை கல்வி, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



கோவை: வெளி நபர்கள் மூலம் தொலைநிலை கல்வி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.




latest tamil news



பல்கலைகள், கல்லுாரிகள் சார்பில் தொலை நிலை கல்வி இயக்ககம் மற்றும் ஆன்லைன் வழிக்கல்வி சான்றிதழ், பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தொலை நிலை கல்வி, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகளை கடந்த, 2020ம் ஆண்டு யு.ஜி.சி., மாற்றியமைத்தது.

ஒரு சில கல்வி நிறுவனங்கள் வெளிநபர்கள் மற்றும் தனியாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தொலை நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளன.


latest tamil news



இதுகுறித்த புகார் யு.ஜி.சி.,க்கு சென்றது. இதையடுத்து, உயர் கல்வி நிறுவனங்கள் வெளி நபர்கள் அல்லது தனியார் மூலம் தொலை நிலை கல்வி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

மேலும், யு.ஜி.சி., விதிகள், சட்டங்களை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இதுபோன்று ஆன்லைன் வகுப்புகள், தொலை நிலை கல்வி மூலம் வழங்கப்படும் பாடத்திட்டங்களில் சேரும் முன், அவை யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்டவையா என்பது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
24-ஜன-202220:21:27 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்.
Rate this:
Cancel
Sukumar R -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜன-202212:17:51 IST Report Abuse
Sukumar R நீட் எதிர்பாளர்கள் கூறும் காரணங்களுள் முக்கியமானது பணக்கார மாணவர்கள் சில லட்சங்கள் கொடுத்து தனியார் கோச்சிங் செல்லமுடியும் ஏழை மாணவர்களால் அது முடியாது என்பதுதானே? இப்போது யூஜிசியால் இது முடியும் என்றால் மத்திய அரசு நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களை மூடிவிடலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X