திருப்பூர்: மத்திய பட்ஜெட் என்றாலே, திருப்பூர் பின்னலாடைத் துறையினருக்கென எதிர்பார்ப்புகள் உண்டு. சாதகமான அம்சங்களும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வகையி லும், பட்ஜெட் அமைந்தால், பின்ன லாடைத்துறையினர் தங்கள் கனவுகளை நிஜமாக்க முடியும்; அதற்கு, காலமும் கைகொடுக்கும்.
![]()
|
தொழில்துறையினர் கூறியதாவது:
பஞ்சுக்கு இறக்குமதிவரி வேண்டாமே!
பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. ஒசைரி நுால் விலை தொடர்ந்து உயர்ந்து, பின்னலாடை உற்பத்தியை பாதிக்கச் செய்கிறது. மத்திய அரசு, இறக்குமதி பஞ்சுக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும். வங்கதேசம் உட்பட போட்டி நாடுகள், நம் நாட்டிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு ஆடைகளை சந்தைப்படுத்துகின்றன; இந்திய ஆடை உற்பத்தி துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றன.
பஞ்சு ஏற்றுமதிக்குதடை தேவை
உள்நாட்டில் பஞ்சு விலையை கட்டுப்படுத்தவும், சர்வதேச ஆடை வர்த்தக சந்தையில் நிலவும் போட்டிகளை எதிர்கொள்ள ஏதுவாகவும், பஞ்சு ஏற்றுமதிக்கு அதிகபட்ச வரி விதிக்கவேண்டும் அல்லது பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும்.
கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால், நிறுவனங்களின் நிதி நிலை மோசமடைந்துள்ளது. டியூட்டி டிராபேக், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., உள்ளிட்ட சலுகைகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கச்சா பட்டு மற்றும் பட்டு நுாலுக்கான 15 சதவீத இறக்குமதி வரியை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.
![]()
|
பின்னலாடை துறை சார்ந்த எல்லாவகை பிரச்னைகளையும் எளிதில் அரசின் கவனத்துக்கு கொண்டுசென்ற தீர்வுகாண ஏதுவாக, பின்னலாடை வாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிடவேண்டும். புதுமையான ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும்வகையில், பின்னலாடை துறைக்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.இவையே திருப்பூர் பின்னலாடை துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்பாக உள்ளது. பட்ஜெட் எதிர்பார்ப்புகளை, தொழில் அமைப்பினர் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE