உத்தவ் தாக்கரே விமர்சனம்: தேவேந்திர பட்னவிஸ் பதிலடி

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மும்பை: சிவசேனா கட்சி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக விமர்சித்திருந்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.சிவசேனா கட்சி நிறுவனரான பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‛பா.ஜ.,வின் சந்தர்ப்பவாத இந்துத்துவம்,
Maharashtra CM, BJP Leader, Devendra Fadnavis, Uddhav Thackeray,

மும்பை: சிவசேனா கட்சி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக விமர்சித்திருந்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

சிவசேனா கட்சி நிறுவனரான பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‛பா.ஜ.,வின் சந்தர்ப்பவாத இந்துத்துவம், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். சிவசேனா 25 ஆண்டுகளை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து வீணடித்துவிட்டது,' என கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மாநில பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.


latest tamil news



செய்தியாளர்களிடம் பட்னவிஸ் கூறியதாவது: மும்பையில் பா.ஜ., இருந்த நேரத்தில் சிவசேனா கட்சியே உதயமாகவில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எங்களுடன் கூட்டணியில் இருந்தபோது சிவசேனா நம்பர் ஒன் அல்லது நம்பர் 2 கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் 4வது இடத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் பால் தாக்கரேவுக்காக சமூக வலைதளத்தில் பதிவிடுவார்களா என சிவசேனா கட்சியினருக்கு நான் சவால் விடுகிறேன். ராமர் கோவில் இயக்கத்தின்போது நீங்கள் பேச்சு மட்டுமே கொடுத்தீர்கள், நாங்கள் (பா.ஜ.,வினர்) தோட்டாக்களையும், தடியடிகளையும் எதிர்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202207:00:14 IST Report Abuse
Kasimani Baskaran இந்துக்களின் வாக்குகளைப் பெற்று இந்துக்களுக்கு விரோதிகளான ஒரு கூட்டணியில் குப்பை கொட்டிக்கொண்டு ஓவராக இப்பொழுதுதான் பேச முடியும். அடுத்த தேர்தல் வந்தால் இந்துக்களின் வாக்கு மறுபடியும் கிடைக்காது.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
25-ஜன-202200:47:14 IST Report Abuse
Sai பா.ஜ.,வின் சந்தர்ப்பவாத இந்துத்துவம், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு - பட்டவர்த்தனமான அக்ஷ்ர லக்ஷம் பெரும் பொன்னான வார்த்தைகள் சபாஷ் தாக்கரே
Rate this:
Cancel
24-ஜன-202218:48:54 IST Report Abuse
பேசும் தமிழன் இவர் munpubகூட்டணி வைத்த... திரு பாலாசாஹேப் தாக்கரே அவர்களை குறை கூறுகிறார் போல் தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X