பஞ்சாப் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை செய்யும் கெஜ்ரிவால்; சித்து விமர்சனம்

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சண்டிகர்: ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் தனது மோசமான தந்திரங்களால் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார்.பஞ்சாப் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் பிப்.,20ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இதில் ஆம்ஆத்மியும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம்
Navjot Sidhu, Targets, Arvind Kejriwal, Punjab, Telepoll, Fraud, Scamster, சித்து, பஞ்சாப், காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி, ஏமாற்றுக்காரர், மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் தனது மோசமான தந்திரங்களால் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் பிப்.,20ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இதில் ஆம்ஆத்மியும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறி, அதற்காக பிரத்யேக தொலைபேசி எண்ணையும் அறிமுகப்படுத்தினார். அடுத்த சில நாட்களில் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான்னை அறிமுகப்படுத்திய ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ‛பஞ்சாப் முதல்வர் முகத்தை தேர்வு செய்வது தொடர்பாக 21 லட்சம் பேர் பதிவு செய்ததாக' குறிப்பிட்டார்.


latest tamil news


இது தொடர்பாக இன்று (ஜன.,24) பஞ்சாப் மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் முகத்திற்காக ஒரு எண்ணை அறிமுகப்படுத்தினார். அதில், சுமார் 21 லட்சம் அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார். அந்த எண், 24 மணிநேரமும் செயல்படும் எண்ணாக இருந்தாலும் கூட, ஒரு தனிப்பட்ட எண்ணுக்கு ஒரு நாளைக்கு 5000 மெசேஜ் அல்லது அழைப்புகள் வராது. இது மக்களை ஏமாற்றும் மோசடி.


latest tamil news


கெஜ்ரிவால் ஒரு முகமூடிக்காரர். ஒரு கருத்தை போலியாக உருவாக்க முயற்சிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ள நிலையில், இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது மோசமான தந்திரங்களால் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். ஆம் ஆத்மி கட்சி போலி செய்திகளின் கலப்பின மாதிரியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
24-ஜன-202219:37:08 IST Report Abuse
M  Ramachandran அவர் படித்தது என்னவோ ஐ யே எஸ்.ஆனால் அவர் அரசியலுக்கு வந்ததால் குபள்ள நாரி தந்திரத்தய் (குறுக்குப்புத்தி) ப்ரோயோஆகிக்கிறார்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-ஜன-202219:30:59 IST Report Abuse
sankaseshan ஆம் ஆத்மீ காங்கிரஸ் இரண்டுமே ஏமாற்று பேர்வழிகள் அண்ணா ஹசாரேயை ஏமாற்றிய கில்லாடி கேஜரிவால்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-ஜன-202219:16:29 IST Report Abuse
Vijay D Ratnam ஆட்சியை பிடித்தால் போதும் பிறகு சமாளித்துக் கொள்ளலாம், வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தூக்கிலா போட்டுவிட போகிறார்கள் என்று அர்விந்த் கெஜ்ரிவால் அரதப்பழசான கருணாநிதி காலத்து ஸ்டாலின் பாணியை பின்பற்றி அரசியல் செய்கிறார். நடக்கவே முடியாத வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். கோவாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து மாதம் 3000 ரூபாய் உதவிப்பணம் வழங்குவாராம். அது போல இல்லத்தரசிகளுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்குவாராம். உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர் ஓய்வு ஊதியத்தை ரெட்டிப்பாகி வழங்குவாராம். இலவச பஸ் பயணம், ரேஷன், இலவச மனைப்பட்டா என்று வாய்க்கு வந்ததை வாக்குறுதியாக சொல்கிறார். எவன் அப்பன் வீட்டு பணத்தை எடுத்து எவன் எவனுக்குடா குடுப்பீங்க. டெல்லியை போல கோவாவையும் நாசமாக்க முடிவு செய்துவிட்டார். ஏழைமக்கள் இந்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போகிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு இந்த போய் வாக்குறுதி கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். உழைத்து சம்பாதித்து வரிசெலுத்தும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒத்த பைசா இலவசமாக கொடுக்கக்கூடாது. வேண்டுமானால் கட்சி பணத்தில் இருந்து கொடுக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X