முதுமலை வனப்பகுதியை கண்காணிக்க தானியங்கி கேமரா

Added : ஜன 24, 2022
Advertisement
நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், வனக்குற்றங்களை தடுக்க, வனப்பகுதியில், வேட்டைத் தடுப்பு முகாம்கள் அமைத்து, 24 மணி நேரமும் வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வனத்தை கண்காணிக்கவும்; வனத்தீயை அறிந்து தடுக்கவும்; சுற்றுலா அனுமதிக்கப்பட்ட பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஒன்பது இடங்களில் சோலார் மூலம் இயங்கும்

நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், வனக்குற்றங்களை தடுக்க, வனப்பகுதியில், வேட்டைத் தடுப்பு முகாம்கள் அமைத்து, 24 மணி நேரமும் வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வனத்தை கண்காணிக்கவும்; வனத்தீயை அறிந்து தடுக்கவும்; சுற்றுலா அனுமதிக்கப்பட்ட பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஒன்பது இடங்களில் சோலார் மூலம் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துள்ளனர்.

கேமராக்கள் அனைத்தும், கிளமார்கன் பகுதியில் உள்ள டவருடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை தெப்பக்காடு கண்காணிப்பு மையத்தின், கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 'இதன் மூலம் வனப்பகுதிக்கு, கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X