அரூரில், மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்தை கண்டித்து, அனைத்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் காந்தி தலைமை வகித்தார். இதில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணமடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கரூரான், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் குமார், பழனி உள்பட, பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE