சந்துக்கடையை கண்டித்து தொழிலாளி சாலைமறியல்

Added : ஜன 24, 2022 | |
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், மந்தைவெளியை சேர்ந்தவர் ஜீவநதி, 38. கிராமிய கலைக்குழுவை சேர்ந்த தொழிலாளியான இவர், நேற்று மாலை, 6:30 மணிக்கு, கிரைன்பஜார் பஸ் ஸ்டாப்பில் தனி நபராக சாலைமறியலில் ஈடுபட்டார். ஆத்தூர் டவுன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது அவர், 'முழு ஊரடங்கான இன்றும்(நேற்று), மற்ற நாளிலும் சாராயம், சந்துக்கடையில் மது விற்பனை அதிகளவில் உள்ளது. ஆனால், சாராயம், சந்துக்கடை

ஆத்தூர்: ஆத்தூர், மந்தைவெளியை சேர்ந்தவர் ஜீவநதி, 38. கிராமிய கலைக்குழுவை சேர்ந்த தொழிலாளியான இவர், நேற்று மாலை, 6:30 மணிக்கு, கிரைன்பஜார் பஸ் ஸ்டாப்பில் தனி நபராக சாலைமறியலில் ஈடுபட்டார். ஆத்தூர் டவுன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது அவர், 'முழு ஊரடங்கான இன்றும்(நேற்று), மற்ற நாளிலும் சாராயம், சந்துக்கடையில் மது விற்பனை அதிகளவில் உள்ளது. ஆனால், சாராயம், சந்துக்கடை விற்பனையாளர்களை கைது செய்யாமல் குடிக்கச்செல்வோர், கூலித்தொழிலாளர்களை கைது செய்கின்றனர்' என்றார். போலீசார், 'சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளிக்க, அவர், மறியலை கைவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X