சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மனசாட்சி இருக்கிறதா?

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (1)
Advertisement
மனசாட்சி இருக்கிறதா?வி.தினேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போக்குவரத்து விதியை மதித்து, உயர் நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடித்து, ஆட்டோ ஓட்டுனர் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, படங்களுடன் செய்தி வெளியிட்டது, நம் நாளிதழ்.இதை எதிர்த்து, தொ.மு.ச., -- சி.ஐ.டி.யூ., உட்பட 14 தொழிற்சங்கங்கள் இணைந்து, சென்னை, அண்ணாசாலை தாராபூர் டவர்ஸ் எதிரே


மனசாட்சி இருக்கிறதா?வி.தினேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போக்குவரத்து விதியை மதித்து, உயர் நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடித்து, ஆட்டோ
ஓட்டுனர் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, படங்களுடன் செய்தி வெளியிட்டது, நம் நாளிதழ்.இதை எதிர்த்து, தொ.மு.ச., -- சி.ஐ.டி.யூ., உட்பட 14 தொழிற்சங்கங்கள் இணைந்து, சென்னை, அண்ணாசாலை தாராபூர் டவர்ஸ் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளன.இந்த ஆர்ப்பாட்டம் எப்படி இருக்கிறதென்றால், 'நாங்கள் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வோம்... எங்களை யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது' என, ஆட்டோ ஓட்டுனர்கள் மிரட்டுவது போல உள்ளது.இந்த தொழிற்சங்கங்களும், மக்களுக்கு விரோதமான ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம் என்ற கூச்ச உணர்வு கிஞ்சிற்றும் இன்றி, கோஷம் போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அங்கெல்லாம், போக்குவரத்து விதிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், 'மீட்டர்' கட்டணத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதில்லை; பயணியிடம் மரியாதையாக பேசுகின்றனர்; சீருடை
அணிகின்றனர்.'ஓலா, ஊபர்' உள்ளிட்ட 'ஆன்லைன்' ஆட்டோவில், 100 ரூபாய்க்கு செலலும் இடத்திற்கு, சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள், 200 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கின்றனர்.சென்னையில் உள்ள, 95 சதவீத ஆட்டோக்களில் மீட்டரே இருக்காது; அப்படி இருந்தாலும் அது வேலை செய்யாது.சட்டத்தின் படி நடந்து கொள்ளுங்கள் என்றால், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஏன் கோபம் வருகிறது.அந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக கொடி பிடித்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்களுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கவே இருக்காதா?


தானியங்கள் வீணாக கூடாது!எஸ். சுந்தாசா, கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு கொள்முதல் செய்யும் உணவு தானியங்களில் அதிகபட்ச இழப்புகளை சந்திக்கும் மாநிலங்களில், ஆண்டுதோறும் முதல் மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றை தமிழகம் பிடித்து விடுகிறது.ஆண்டுதோறும் உணவு உற்பத்தியை பெருக்க, மாநில அரசுகள் முனைப்பு காட்டுகின்றன.இயற்கை சீற்றங்களால், சில ஆண்டுகள் எதிர்பார்த்த அளவு சாகுபடி நடப்பதில்லை. இது போன்ற நேரங்களில், உணவு தானிய சேமிப்பு மற்றும் உணவு பதனிடும் தேவை அதிகரித்து வருகிறது.தண்ணீர் தேவைக்கு மழை மற்றும் அண்டை மாநில உதவியை எதிர்பார்க்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில், உணவு தானிய சேமிப்பின் அவசியம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.தமிழகத்தில் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பா சாகுபடி தான், மாநிலத்தின், 60 சதவீதத்திற்கு அதிகமான உணவு தேவையை நிறைவேற்றுகிறது.ஒரே நேரத்தில் அதிகமான கொள்முதல், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நடப்பதால், தானியங்களை சேமிக்க இடம் இல்லாமல், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் செயல்படுத்தப்படுகின்றன.போதிய சேமிப்பு கிடங்குகள் இல்லாததால், 15 சதவீதம் அளவுக்கு தானிய இழப்பு ஏற்படுகிறது.உற்பத்தியை பெருக்கிய போதும், இன்னும் தமிழக அரசு, 752 நேரடி கொள்முதல் நிலையங்களை மட்டுமே நம்பி உள்ளது. இவற்றில் பெரும்பான்மையானவை, சேமிப்பு கிடங்கு இல்லாத தற்காலிக மையம் போலவே
செயல்படுகின்றன. இந்திய உணவு கழகம், தேசிய அளவில் உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. சில ஆண்டுகளாக குடோன்களை அதிகரித்து, நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உணவு தானிய இழப்பை, 0.002 சதவீத அளவில் குறைத்துள்ளது.பஞ்சாப் போன்ற மாநிலங்களில், நடமாடும் உலர் இயந்திரங்கள் அதிகப்படியாக பயன்படுத்துவதால், கொள்முதல் நேரம் மிச்சப்படுத்தப்
படுகிறது.தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் இது போன்ற யுக்திகளை கையாண்டால், தானிய இழப்பை பெருமளவு குறைக்கலாம்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


பல்முனை தாக்குதல்!வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஸ்மார்ட் போன்' மோகம், இனக் கவர்ச்சி, சுய கட்டுப்பாடு இன்மை, பெற்றோர் கவனிப்பின்மை, வறுமை உள்ளிட்ட காரணங்களால், 14 வயது முதல், 17 வயதுக்குட்பட்ட சிறுமியர், குழந்தை பெற்றெடுப்பது பரவலாக அதிகரித்து வருகிறது.இரு வீட்டார் சம்மதத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிக்கு ரகசியமாக திருமணம் செய்து வைப்பது, ஒரு பக்கம் அரங்கேறி வருகிறது.
பெண் குழந்தையின் நடவடிக்கை, உடல் ரீதியான மாற்றம் ஆகியவற்றை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க தவறுவதால், கர்ப்பமான மாணவியர் சிலர், குழந்தை பெற்றெடுத்து பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கின்றனர்.இளம்வயதில், குழந்தை பெற்றெடுப்பது என்பது தாய், -சேய் இருவருக்கும் ஆபத்தாக முடிகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மட்டும், கடந்த வாரம், 13 முதல் 17 வயது உட்பட்ட பள்ளி மாணவியர், ஏழு பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை பிறந்த பின், அதற்கு தந்தை யார் என்பதை தேடிப்பிடிக்க வேண்டிய நெருக்கடியான வேதனை மிகுந்த சூழ்நிலை ஏற்படுகிறது.பள்ளியில் மாதம் ஒருமுறை, மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை, உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், 'வீடு தேடி மருத்துவம்' என்ற
திட்டத்தின் ஒரு பகுதியாக, பருவ வயது மாணவியரின் உடல் நலம் குறித்து, கிராம சுகாதார செவிலியர் வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணத்திற்கு முன் மாணவி ஒருவர், குழந்தை பெற்றெடுப்பது என்பது சக மாணவியரிடம் பெரிய அதிர்வலைகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும்; அதனால்படிப்பின் மீதுள்ள கவனம் சிதறும்.
இது, பெற்றோரையும் அச்சத்தில் ஆழ்த்தி விடுகிறது. இதனால், தங்கள் பெண் குழந்தையின் படிப்பை இடையில் நிறுத்தி, திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.மாணவியர் கர்ப்பம் என்பது, சமூகத்தின் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல் என்பதை, அரசு உணர வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
25-ஜன-202211:55:51 IST Report Abuse
raja "மாணவியர் கர்ப்பம் என்பது, சமூகத்தின் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல் என்பதை, அரசு உணர வேண்டும்."...... கேடுகெட்ட விடியாத அரசின் உடன்பிறப்புகளும்... பிச்சை போட்டவர்களும் தானே இந்த கேடுகெட்ட தனத்தை செய்யிறானுவோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X