இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : ஜன 24, 2022 | |
ஜன., 25, 1983மதுரையில் 1905 ஆக., 14ல் பிறந்தவர் என்.எம்.ஆர்.சுப்பராமன். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை வாசம் அனுபவித்தார். வினோபா பாவேயின் பூமி தான திட்டத்தில், தன், 100 ஏக்கர் நிலங்களை, ஏழை,- எளிய மக்களுக்கு வழங்கினார். மதுரை மாவட்ட காங்., தலைவராக, 1930ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த, 1934ல், தீண்டாமைக்கு எதிராக, நாடு முழுதும் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அவர், மதுரை வந்த

இதே நாளில் அன்று


ஜன., 25, 1983



மதுரையில் 1905 ஆக., 14ல் பிறந்தவர் என்.எம்.ஆர்.சுப்பராமன். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை வாசம் அனுபவித்தார். வினோபா பாவேயின் பூமி தான திட்டத்தில், தன், 100 ஏக்கர் நிலங்களை, ஏழை,- எளிய மக்களுக்கு வழங்கினார். மதுரை மாவட்ட காங்., தலைவராக, 1930ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த, 1934ல், தீண்டாமைக்கு எதிராக, நாடு முழுதும் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அவர், மதுரை வந்த போது சுப்பராமன் வீட்டில், இரண்டு நாள் தங்கினார்.மதுரை நகராட்சி தலைவராகவும், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1962ல், லோக்சபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவினார். 1983 ஜன., 25ல் தன் 78வது வயதில் காலமானார். 'மதுரை காந்தி' என்.எம்.ஆர்.சுப்பராமன் காலமான தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X