மாவட்டம் முழுவதும் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : ஜன 24, 2022
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டம் முழுவதும், ஹிந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.'அரியலுார் மாணவி இறப்புக்கு நீதி வேண்டும்; உண்மை குற்றாவளிகளை கைது செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊட்டியில், ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.*குன்னுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு,
 மாவட்டம் முழுவதும் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஊட்டி:நீலகிரி மாவட்டம் முழுவதும், ஹிந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.'அரியலுார் மாணவி இறப்புக்கு நீதி வேண்டும்; உண்மை குற்றாவளிகளை கைது செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊட்டியில், ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.*குன்னுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கார்த்திக், பா.ஜ மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.*கூடலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் குருசாமி ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் சுரேஷ், ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* பந்தலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஹிந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முரளி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X